வந
|
ஒன்பதாந்திருவாய்மொழி
- பா. 4 |
253 |
வந்து’
என்கிறார். ‘புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது, நிலையியற்பொருள் போன்று எழுந்தருளியிருக்க
வேண்டும்’ என்பார், ‘இடைவீடின்றி மன்னி’ என்கிறார். ‘இருந்து கொள்ளும் காரியம்
என்?’ எனின், ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே’ என்கிறார்; அதாவது, மலர் மாலை,
சந்தனம் முதலியவைகளைப் போன்று கொள்ள வேண்டும். ‘அவை, பிறர்க்கேயாக இருக்கும்
பொருள்களாமோ?’ எனின், அவை, சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய், மிகுதியைக் கழித்துப்
போகடுமித்தனையே அன்றோ?’ ஆயின், அடிமையாய் உள்ள ஒருவனுக்கு, தான் ஒன்றை விரும்பிக் கேட்பதற்கு
இடம் உண்டோ?’ எனின், ‘இருவர் கலக்குமிடத்துக் கலவியால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும்
ஒத்து இருக்குமன்றே? அங்ஙனம் என்னுடைய பிரீதிக்கு நான் சேர்ந்தவனாக ஒண்ணாது,’ என்கிறார்
என்றபடி.
‘இதுகாறும்,
‘அம்மா’, ‘நின்’ என்பன போன்று முன்னிலையாகக் கூறிவந்தவர், இப்பாசுரத்தில், ‘தனக்கே’ என்றும்,
‘கண்ணனை’ என்றும் படர்க்கையாக அருளிச்செய்வதற்குக் காரணம் என்?’ எனின், ‘பேற்றினை அறுதியிடும்
சமயத்தில் திருமுகத்தைப் பார்க்கில் உறுதி குலையும்’ என்று கவிழ்ந்திருந்து கையோலை செய்து
கொடுக்கிறார்.
1மேல்
‘தனக்கேயாக’ என்ற பின்புத்தை ‘எனக்கே’ என்ன வேண்டுமன்றே? ஆதலின், ‘எனக்கே’ என்கிறார்.
இனி, புருஷார்த்தம் ஆகைக்காகச் சொல்லுகிறார் எனலுமாம். 2‘விரும்பிப் பெறவேண்டியவன்
ஒரு சேதநனே ஆவன். நீர் விரும்புகிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேண்டுங்காணும்’
என்ன, ‘யான் கொள்’ என்கிறார்; அதாவது, ‘சொரூப ஞானத்தை நீ பிறப்பிக்க, அதனாலே
சொருப ஞானமுடைய நான் ஒருவனும் பெறும்படி செய்யவேண்டும்’ என்றபடி. ‘உமக்கும் நம்மால் எப்போதும்
செய்யப்போகாது’ என்ன, ‘சிறப்பே’ என்கிறார்;
_____________________________________________________________
1. ’எனக்கே’ என்று அகங்காரம்
தோன்றச் சொல்லுதல் குற்றம் அன்றோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘மேல் ‘தனக்கேயாக’
என்றார்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
2. ‘புருஷார்த்தமானால்,
‘எனக்கு’ என்னவேண்டுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘விரும்பிப் பெற வேண்டியவன்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். ஆக, ‘எனக்கு’
என்பதற்குப் பொருள், ‘உனக்கே உறுப்பான எனக்கு’
என்பதாம்.
|