ஒ
272 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஒரு பொருளாக நினையாமல்,
ஒலிக்கின்ற ஒலியையுடைய பாஞ்ச ஜன்யத்தையுடைய அழகர் தங்கியிருக்கும் இடமாய், சந்திரன் தவழ்கின்ற
சிகரங்களையுடையதாயுள்ள திருமாலிருஞ்சோலையாகிய திருப்பதியைத் துதித்துப் பிறவிப் பெருங்கடலினின்று
எழுதலே பயனாம்.
வி-கு :
‘மதியாது ஏத்தி எழுவது பயன்’ என முடிக்க, எழுவது தொழிற்பெயர்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘திருமலையோடு சேர்ந்த திருப்பதியைக் கிட்டுதலே பரமப் பிரயோஜனம்’ என்கிறார்.
இனி, ‘மாலிருஞ்சோலையைச் சேர்ந்த பதி’ என்னாது, ‘மாலிருஞ்சோலையாகிய பதியைக் கிட்டுதலே
பரமப் பிரயோஜனம்’ என்கிறார் எனலுமாம்.
சதிர் இள மடவார்
தாழ்ச்சியை மதியாது - சதிர் இள மடவார் விஷயமாக நீங்கள் செய்யும் 1தாழ்ச்சியை
ஒன்றாகப் புத்தி பண்ணாமல். இனி, ‘சதிர் இள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியைப் புத்தி
பண்ணாமல்’ என்று கோடலுமாம். மதித்தால், பிரயோஜனம் இல்லாமையே அன்று; மேல் நரகம், இங்கு
மேன்மக்களால் நிந்திக்கப்படுதல். மேலும், ‘பக்தா நாம்’ என்கிறபடியே, பிறர்களுக்கு உரியதாய்
நிரதிசய போக்கியமாய் இருக்கும் விஷயம் அன்று; ஆதலின், ‘மதியாது’ என்கிறார் என்னுதல்.
சதிராவது, பிறரை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான விரகு; அதாவது, செத்துக் காட்டவுங்கூட வல்லராய்
இருக்கை. சதிரையும் பருவத்தின் இளமையையும் காட்டி ஆயிற்று அகப்படுத்துவது. மேல், ‘கிளர் ஒளி
இளமை’ என்றாரே அன்றோ? அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக்கொள்ளும் முதலைகள் ஆயிற்று விஷயங்கள்
அதிர்குரல் சங்கத்து
அழகர்தம் கோயில் - திருக்கையின் பரிசத்தால் எப்பொழுதும் ஒக்க முழங்குகின்ற ஸ்ரீ பாஞ்சஜன்னி
___________________________________________________________
1. தாழ்ச்சி - தாழ்ச்சி
தோற்ற இருக்கும் வார்த்தைகளும் செயல்களும். ‘சதிரிள மடவார்
தாழ்ச்சியை’ என்னுமிவ்விடத்தில்
‘பணிமின் திருவருள்
என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி
அணிமென் குழலார்
இன்பக் கலவி அமுதுண்டார்’
(திருவாய். 4. 4. 5.)
‘பாண்தேன் வண்டுஅறையும்
குழலார்கள்பல் லாண்டுஇசைப்ப
ஆண்டார் வையமெல்லாம்
அரசாகிமுன் ஆண்டவரே
மாண்டார் என்றுவந்தார்
அந்தோமனை வாழ்க்கைதன்னை
வேண்டேன் நின்னடைந்தேன்
திருவிண்ணகர் மேயவனே!’
என்பனவற்றை நினைவு கூர்க.
(பெரிய திருமொழி. 6. 2 : 5.)
|