New Page 1
274 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
போன்று (நன்னூல்)
‘கருமம்மே’ என்புழி மகரமெய் விரித்தல் விகாரம், ஓசையின்பத்தின்பொருட்டு வந்தது.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘உத்தேசியத்துக்கு இவை எல்லாம் வேண்டுமோ? திருமலையோடு சேர்ந்த
அயல் மலையை அடைய அமையும்’ என்கிறார்.
பயன் அல்ல செய்து
பயன் இல்லை - இவர் பயன் இல்லாதனவாக நினைத்திருக்கிறது பரமபதத்தில் இருப்பையும் அல்லாத
அவதாரங்களையும். ‘செய்வதற்குச் சுகரூபமாக இருப்பது’ என்கிறபடியே, செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனம்
ஆயிற்றுத் தாம் பற்றின விஷயம் இருப்பது. அன்றியே, ‘பிரயோஜனம் இல்லாதனவற்றைச் செய்து ஒரு
பிரயோஜனம் இல்லை’ எனலுமாம்; என்றது, சாதன தசையிலும் துக்க ரூபமாய், பல வேளையிலும் துக்கம்
கலந்ததாய் இருக்கிற சுவர்க்காதி உலகங்களையும், அவற்றைப் பெறுதற்குரிய சாதனங்களையும்
குறித்தபடி. நெஞ்சே - வேறு விஷயங்களுக்கும் இவ்விஷயத்துக்கும் உண்டான நெடுவாசி நீ அறிந்ததே
அன்றோ? இனி, பந்த மோக்ஷங்கள் இரண்டற்கும் நெஞ்சு பொதுவாய் இருத்தலின், அதனை நோக்கி,
‘நெஞ்சே’ என்கிறார் எனலுமாம். ‘இவ்வளவிலும் இவ்விஷயத்தை அகலுகைக்குக் காரியம்
பார்த்தது நீயே அன்றோ?’ எனலுமாம்.
புயல் மழை வண்ணர்
புரிந்து உறைகோயில் - மழை பெய்கிற மேகம் போன்று இருக்கிற வடிவழகையுடையவர் அவ்வடிவழகை
முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக்கொண்டு வாழ்கின்ற கோயில் 2இனி, ‘மேகம்
போன்று தண்ணீர், நிலம் என்ற வேற்றுமை இன்றி எல்லார்க்கும் முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக்
கொண்டு வாழ்கிற கோயில்’ எனலுமாம். 3இதனால், பிராப்ய பிராபகங்கள் தமக்கு
ஒருவனேயாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. பயனான விஷயந் தான் இருக்கிறபடி. மயல் மிகு
பொழில் சூழ் - சோலைச் செறிவாலே புக்கார்க்கு இருண்டு இருக்கும்படியான சோலைகள் சூழ்ந்த. இனி,
மயல் மிகு - இனிமையின் மிகுதியாலே மனத்தை இருளப் பண்ணும் என்று பொருள் கூறலுமாம்.
மாலிருஞ்சோலை
_____________________________________________________________
1. உத்தேசியம் - தாம் அறுதியிட்ட
பேறு.
2. ‘வண்ணர்’ என்பதற்கு நிறம்
என்றும், தன்மை என்றும் இரண்டு பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருளில், நிறம்; இரண்டாவது
பொருளில், தன்மை. புரிதல் -
கொடுத்தல்.
3. ‘புயல் மழை வண்ணர்’
என்றதனால் பிராப்யமும், ‘புரிந்து’ என்றதனால் பிராபகமும்
கொள்க.
|