ஈ
பத்தாந்திருவாய்மொழி
- பா. 10 |
285 |
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘பல படியாலும் திருமலையே மிக உயர்ந்த பேறு’ என்று தொடங்கினபடியே
முடிக்கிறார்.
சூது என்று களவும் சூதும்
செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள்
‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’
என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத்
திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன்
இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா
வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம். வேதம்
முன் விரித்தான் விரும்பிய கோயில் - இவை ஒருவர்க்கு வாராதபடி வேதார்த்தத்தை விளக்கி விவரித்த
கீதோபநிஷத்து ஆசாரியன் வாழ்கிற கோயில்.
மாது உறுமயில் சேர்
மாலிருஞ்சோலை - பேடையை உற்ற மயில் சேர்ந்திருக்கின்ற மாலிருஞ்சோலை. இனி, ‘மாதுறு மயில்’
என்பதற்கு, மாது என்று மென்மையைக் கூறுகிறதாய், ‘சுகுமாரமாய்க் கண்ணுக்கு இனியதான மயில்’ என்று
பொருள் கூறலுமாம். இதனால், அங்குள்ள பொருள்களெல்லாம் 5மிதுனமேயாய் வசிக்கும்
என்பதனைத் தெரிவித்தபடி. போது அவிழ்மலையே புகுவது பொருளே - கொடியும் தண்டும் சருகும் இடை
இடையே பூவுமாக இருத்தல் அன்றித் திருமலைதன்னை முட்டாக்கிடப் பூத்துக் கிடந்த
________________________________________________________
1. முதலில் ‘சார்வது சதிரே’
என்று தொடங்கி, முடிவில் ‘புகுவது பொருளே’ என்று
முடிப்பதனால், ‘சதிர்’, ‘பொருள்’ என்று இரண்டனையும்
பேற்றினைக் குறிக்கும்
சொற்களாகக் கருதி அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘பல படியாலும்’ என்று
தொடங்கி.
2. நூல்கள் இவ்விரண்டனையும்
விலக்குதலைத் திருக்குறள் முதலிய நூல்களால்
உணரலாகும்.
3. பாரதம் உத்தியோக பர்வம்.
இது திருதராஷ்டிரனைப் பார்த்து சனத்ஸூஜாதன் கூறுவது.
4. களவாவது, காணாதே,
அபகரித்தல்; சூதாவது கண்முன்னே அபகரித்தல் என்றபடி.
5. மிதுனம் - ஆண் பெண்
இரட்டை.
|