எவ
  
    | 
     
இரண்டாந்திருவாய்மொழி - பா. 6  | 
    
     
    47  | 
   
 
    எவரும் யாவையும் எல்லாப் பொருளும் - அறிவுடைப் பொருளும் 
அறிவில்லாத பொருளும் ஆகிய எல்லாப்பொருள்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது. 
கவர்வு இன்றி - கவர்கையாவது, பற்றுகை: அதாவது, துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி. தன்னுள் 
ஒடுங்க நின்ற -1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை 
உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே,
2தன்னுள் அடங்க நின்ற. இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் 
ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம். பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் - இவர்களைக் 
காப்பதற்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தையுடையனாய். இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் 
பேறு என்று தோன்றும்படி இருக்கிற திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர், எம் ஆழி அம் 
பள்ளியாரே - 4தம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு, 
எங்களைப் பாதுகாத்தற்காக வந்து பிரளயத்தை அழகிய படுக்கையாவுடையவர் ஆனார். பள்ளி - படுக்கை.
5‘பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை’ என வருதல் காண்க. 
    ‘இப்படி ஆபத்துக்காலத்தில் 
துணைவனாய் 6அணியன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன்,’ என்கிறார்.                                
(6) 
_____________________________________________________________ 
1. பாரதம், ஆரண்ய. 
2. இது அவாந்தர சம்ஹாரத்தைக் 
குறித்தது. 
3. இது மஹாசம்ஹாரத்தைக் 
குறித்தது. இப்பொருளில் ‘கவர் வின்றி’ என்பதற்கு, ‘ஒன்றும் 
  தப்பாமல்’ என்று பொருள் 
கொள்க. 
4. ‘எம்’ என்ற பன்மையின் 
பொருளை விரிக்கிறார். ‘தாம் சம்சார 
  மத்யஸ்தராயிருக்கையாலே எல்லாரையுங் கூட்டிக்கொண்டு’ 
என்று ‘தாம்’ என்றுது, 
  ஆழ்வாரை. ‘தாம் இருக்கிற சம்சாரத்திலே வந்து கண் வளர்ந்தருளிற்று, 
தம்மை 
  உஜ்ஜீவிப்பிக்கைக்கு என்று’ என்பது, இருபத்து நாலாயிரப்படி வியாக்கியானம். 
5. நிகண்டு. 
6. ‘ஆழி அம் பள்ளியாரே’ 
என்றதனை நோக்கி ‘அணியன் ஆகையாலும்’ என்கிறார். 
 |