1
|
மூன்றாந்திருவாய்மொழி - பா. 2 |
63 |
1‘குட்டை
மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின், செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது
என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு. ‘ஆயின் எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம்
என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின்,
காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை
இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு
எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய்
இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து
அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்.
‘‘இப்படி அவதரித்துச்
செய்தது என்?’ எனின், உயிராய் - இவ்வாத்துமாதான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக்
கூடியவனாய் இருக்கை. இனி, ‘உயிராய்’ என்பதற்குத் ‘தாரகனாய்’ எனலுமாம். என்னைப் பெற்ற அத்தாயாய்
- பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று இவன் பிரியத்தையே
நடத்தக் கூடிய தாயாய். 4மற்றைத் தாயர்களை நீங்குதற்குப் ‘பெற்ற தாய்’
என்கிறார். தந்தையாய் - இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்து பெற்ற தாயும் இட்டு வைத்தற்கு
ஒரு பை மாத்திரமாம் படி, இவன் தோன்றுவதற்குக் காரணனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாகி. தான்,
தனக்குத் தேடிக் கொள்ளும் நன்மையும், 5தான் உளனாய பின்னரே செய்துகொள்ள வேண்டுதலின்,
‘உயிராய்’ என்றதனைச் சார, தாய் தந்தையர்களை அருளிச்செய்கிறார். அவ்வளவே அன்றி,
அறியாதன அறிவித்து -
_____________________________________________________________
1. குட்டை மாமரமாக நின்றது,
திருவதரிகாச்சிரமத்தில் என்பர்,
2. அதிமா நுஷ ஸ்தவம், 15.
3. பரிபாடல், 3 ஆம் பாட்டு.
60,61 ஆம் அடிகளின் உரையைப் பார்க்க.
4. தாயார் ஐவர்: ஆட்டுவான்,
ஊட்டுவாள், ஓல் உறுத்துவான், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்பவர். (சிந். 363)
சுவரினை வைத்தே சித்திரம்
எழுதுதல் வேண்டும்’ என்னும் பழமொழியை ஈண்டுச்
சிந்திக்க.
|