இறப
|
மூன்றாந்திருவாய்மொழி - பா. 10 |
83 |
இறப்பும் நீங்கி, பேரொளி
மயமான திருமேனியினை உடையோமாய், மழையினைப் பெய்கிற ஆகாயத்தையும், பூமியையும், ஒளியுடன்
கூடிய ஆழியினையும் சங்கினையும் ஏந்திக் காத்தருளுகின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும்
கொண்ட இறைவனைச் சார்ந்த நித்திய சூரிகளுடைய கூட்டத்தை ஒரு நீராம்படி உடன்பட்டுக் கூடுவது என்றோ?
வி - கு :
‘வாசனையும் இந்நிலத்தையும், ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற பிரான் அடியார்கள் ருழாங்களை, அற்று
அற்றுச் சோதியமாகி உடன் கூடுவது என்றுகொலோ’ எனக் கூட்டுக. ‘களிப்புக் கவர்ச்சிகளும் பிறப்புப்
பிணி மூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய்’ நிற்றலின், வீட்டினைப்
‘பேரா இயற்கை’ என்னும் விசேடவுரை இத்திருருப்பாசுரத்தைக் கொண்டு எழுந்ததாகும் (திருக்குறள்.
370). சோதியம் - தனித்தன்மைப் பன்மை. ‘கொல், ஓ’ என்பன அசை நிலைகள்.
ஈடு :
பத்தாம் பாட்டு. ‘களித்தேனே’ என்றவர், மீண்டும், ‘இவ்வுலகமக்களோடு பொருந்தியிருத்தல்
நீங்கி, இவ்வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய சூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’
என்கிறார்.
களிப்பும் -
சிற்றின்ப நுகர்ச்சியாலாய களிப்பும், கவர்வும் - ஆசைப்பட்டு அவை பெறாத போது வரும் துன்பமும்,
அற்று- நீங்கி, பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று -1இவை இரண்டற்கும் அடியான பிறப்பும்,
அது புக்க இடத்தே புகக் கூடிய நோயும், பின்னர் வருகின்ற முதுமையும், ‘இவற்றோடேயாகிலும் இருந்தால்
ஆகாதோ?’ என்றுநினைத்திருக்கும் போதே வருகின்ற இறப்பும் ஆகிய இவ்வனைத்தும் நீங்கி. ஒளிக்கொண்ட
சோதியமாய் - இராசசம் தாமசம் கலந்த இச்சரீரத்தைப் போன்றது அன்றியே, சுத்த சத்துவ மயமாய்
எல்லையற்ற ஒளியுருவமான சரீரத்தையுடையோமாய். உடன் கூடுவது என்றுகொலோ -2‘நான்,
எனக்கது’
_____________________________________________________________
1. ‘இவையிரண்டு’ என்றது,
முற்கூறிய களிப்புக் கவர்சிகளை.
2. இவ்வுலகத்து மக்கள்
‘இறைவனுடைய அடியார் குழாங்களைச் சார்ந்திருத்தலே நமக்குப்
பேறு’ என்னும் அறிவு படைத்திருந்தனராயினும்,
நான் எனது என்னும் செருக்கால்
அவர்களை விட்டு அகன்றிருக்கின்றார்களன்றோ? அப்படி அகலவேண்டாதபடியான
சம்பந்ததஞான முடையவர்கள் என்பதனைக் காட்டுவதற்கு ‘நான், எனக்கு என்று அகல
வேண்டாத’ என்கிறார்.
இவ்வுடம்பையுடையோர் - சுத்த சத்துவ மயமான
உடம்பையுடைய நித்திய சூரியன்.
|