|
New Page 1
தேனின் பெருக்குப்
பெருகுகிறது ஆகையாலே, 1நிரதிசய போக்கியமான திருமேனி என்று பொருள் கூறலும் ஒன்று.
மட்டு-தேன். ‘ஆகிலும்’ என்பதற்கு, ‘மாட்டாதிருந்தும்’ என்பது பொருள். அதாவது, ‘கர்மங்காரணமாகப்
படைக்கப்பட்ட சேதநர்கட்குக் கர்ம சம்பந்தமற்றால் அனுபவிக்கும் உன் திருமேனியிலே நெஞ்சை
வைக்க முடியாதன்றோ? ஆதலால், இதுதானே போரும் கேடு; இக்கேட்டிற்கு மேலே,’ என்றபடி.
நின் திருவுருவம்
மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் - 2உன் திருமேனியிலே மனத்தை வைக்க
மாட்டாதவையாய், அவைதாம் பலவாய் இருக்கின்ற சமயமுண்டு - வேறு மதங்கள்; அவற்றின் பக்கலிலே
மனத்தை வைக்கப் பண்ணினாய். இதற்கு, ‘உன் திருமேனியிலே மனத்தை வைக்கவொண்ணாதபடி புறமான
பல சமய மதி பேதங்களையும் செய்துவைத்தாய்,’ என்று பொருள் கூறலுமாம்; அதாவது, ‘பண்டே உன்னையறியாத
சமுசாரிகளுக்கு மதிபேதங்களை உண்டாக்கினாய்,’ என்றபடி. இவையித்தனையும் பயனற்றுப் போமன்றோ,
நீதான் இவற்றுக்கு வந்து கிட்டலாம்படி இருந்தாயாகில்? மலர்த்துழாய் மட்டேநீ மனம் வைத்தாய்
- ‘உன் திருவுள்ளத்தையும் கால் தாழப்பண்ணவல்ல திருத்துழாய் தொடக்கமான போக்கிய 3ஜாதத்திலே
திருவுள்ளத்தை வைத்தாய். இதனால், உன்னுடைய போக்கியதை சிலரால் கிட்டலாய் இருந்ததோ?’ என்கிறார்.
மாடு - இடம்; ‘அதன் பக்கல்’ என்றபடி. மா ஞாலம் வருந்தாதே - 'இப்பெரிய பூவுலகமானது இங்ஙனம்
நோவுபட்டுப் போமித்தனையேயோ!’ என்கிறார்.
கர்மங்கட்குக்
கட்டுப்பட்டவர்களாகையாலே, அவர்களாகவே உன் பக்கல் மனத்தினை வைக்க மாட்டிற்றிலர்; அதற்கு
மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய்; நீயோ,
____________________________________________________
1. நிரதிசயம் -
தனக்குமேல் ஒன்று இல்லாதது.
2. ‘வணங்கும்
துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பால்
பிணங்கும்
சமயம் பலபல வாக்கி அவைஅவைதோறு
அணங்கும்
பலபல வாக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின்
னோரைஇல் லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே.’
என்னும் திருவிருத்தப்பாசுரம் இங்கு
நோக்கத்தகும்.
3. ஜாதம். கூட்டம்.
|