பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
141

தண

தண்தார் கொண்டல்போல் வண்ணன்’ என்கிறார். மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன - பக்கங்களிலே அலர்ந்த சோலையையுடைய திருநகரிக்கு உரியவராய் வள்ளலாரான ஆழ்வார் அருளிச்செய்த. பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - மலர்கள் மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள்.

    வீடு இல போகம் எய்தி - பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து. அமரர் மொய்த்து விரும்புவர் - அமரராலே மொய்த்து விரும்பப்படுவர். 1‘லீலா விபூதியை அவனுடைமை என்னும் தன்மையாலே அநுசந்திப்பார் நித்தியசூரிகளாகையாலே, தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞானவிசேடம் பிறந்து அநுசந்திப்பதே!’ என்று ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேமத்தின் மிகுதியாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, சர்வேசுவரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

(11)

    முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில், முதற்பாட்டில் சொன்ன ஐம்பெரும்பூதங்களினுடைய காரியத்தை முறையே பேசினார்; மூன்றாம் பாட்டில், உலகமே உருவமாய் நின்ற நிலையோடே அசாதாரண விக்கிரகத்தைச் சேர்த்து அனுபவித்தார்; நான்காம் பாட்டில், ‘ஒளி பொருந்திய மாணிக்கம் முதலிய பொருள்களை விபூதியாகவுடையவன்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘சுவைப்பொருள்களை விபூதியாக உடையவன் என்றார்; ஆறாம் பாட்டில், ‘வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையவன்’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘செல்வம் முதலான புருஷார்த்தங்களை விபூதியாக உடையவன்’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘உலகத்தில் பிரதானரான பிரமன் சிவன் முதலியோரை விபூதியாக உடைய

____________________________________________________ 

1. ‘அமரர் மொய்த்து விரும்புவதற்கு அடி யாது?’ என்ன, லீலா விபூதி’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.