| 
எற
 
    எற்றப்புக்கால் 
செய்யலாவது இல்லையே!’ என்றபடி. ‘பிறப்பு’ என்ற இது, மற்றைத் துக்கங்களுக்கும் உபலக்ஷணம். 
(2) 
269 
  
    
மலையை எடுத்துக்கல் 
மாரி 
    காத்துப் 
பசுநிரை தன்னைத் 
தொலைவு தவிர்த்த 
பிரானைச் 
    
சொல்லிச்சொல் லிநின்றுஎப் போதும் 
தலையினொடு ஆதனம் 
தட்டத் 
    தடுகுட்ட 
மாய்ப்பற வாதார் 
அலைகொள் நரகத்து 
அழுந்திக் 
    கிடந்துஉழக் 
கின்ற வம்பரே. 
     
   
 
    
பொ-ரை :
‘மலையை 
எடுத்துக் கல் மழையைக் காத்து, அதனால் பசுக்கூட்டங்களினுடைய துன்பத்தை நீக்கிய உபகாரகனைப் 
பலகாலும் சொல்லி, எல்லாக் காலத்தினும் ஒழியாமல் நின்று, தலையானது தரையிலே படும்படியாகக் 
கீழது மேலதாய்ப் பறந்து ஆடாதவர்கள் பல துக்கங்களையுடைய நரகத்திலே அழுந்திக்கிடந்து 
வருந்துகிற புதியவர் ஆவர்,’ என்றவாறு. 
    
வி-கு : 
‘எடுத்துக் காத்துத் 
தவிர்த்த பிரான்’ என்றும், ‘சொல்லி நின்று தட்டப் பறவாதார்’ என்றும் கூட்டுக. ‘பரவாதார் 
வம்பர்’ என்க. பறவாதார் - வினையாலணையும் பெயர். வம்பு - புதுமை; வம்பையுடையவர் - வம்பர். 
ஆதனம் - ஆசனம்; தரை. தடுகுட்டம் - கீழது மேலதாகை; ஒரு வகைக்கூத்து. நரகம், ஈண்டுப் பிறவிக்கடல். 
    ஈடு : மூன்றாம் 
பாட்டு. 1‘உபகாரம் அறியாத பசுக்களுக்கும் பசுவினைப்போன்ற சாதுக்களான ஆயர்கட்கும் 
வந்த ஆபத்தை நீக்கின மஹாகுணத்தை அநுசந்தித்து உளமும் செயலும் வேறுபடாதவர்கள் நித்திய சமுசாரிகளாய்ப் 
போவார்கள்,’ என்கிறார். 
    மலையை எடுத்து கல் 
மாரி காத்து பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானை - இந்திரனுக்கு ஆயர்கள் இடுவது யாண்டுக்கு 
ஒரு போஜனம் ஆயிற்று; அவர்கள் அவனுக்கு விருந்து இடுகைக்குப் பாரிக்கிற படியைக் கண்டு, 
‘நீங்கள் செய்கிற இது என்?’ என்று கேட்க, ‘மழையின்பொருட்டு இந்திரனுக்குச் சோறு 
_____________________________________________________ 
 
1. ‘பசு நிரைதன்னைத் 
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லிப் 
  பறவாதார் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற 
வம்பரே,’ என்றதனைக் 
  கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். 
 |