|
ப
பாரையோ நீர் நிந்திப்பது?’
என்னில், 1ஓதி உணர்ந்தவர் முன்னா - கற்றுக் கேட்டு முற்றறிவினர்களாய் இருக்கிறவர்கள்
முதலாக. ‘இவர்கள் நிந்திக்கத் தக்கவர்களில் முதன்மை பெற்றவர்களானபடி யாங்ஙனம்?’ எனின்,
வித்துவான்கள் சாஸ்திரத்தைக் கடந்தால் அவர்களுக்குத் தண்டனை அதிகமேயன்றோ? என் சவிப்பார்
- ‘இவர்கள் இருந்து 2செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என்?’ என்னுதல். ‘இவர்கள்
சாப அநுக்கிரஹங்களைச் செய்யும் ஆற்றலரோ?’ என்னுதல். 3மனிசரே - இவர்கள்
சாஸ்திரங்களுக்கு வசப்பட்டவர்களாய் மனிதப் பிறவியில் பிறந்தமை உண்டாகமாட்டாது என்னுமதினும்
ஐயம் இன்மையைத் தெரிவிக்கிறார். ‘மானிடவர் அல்லர் என்று என்மனத்தே வைத்தேனே’ என்றார்
திருமங்கை மன்னன்.
4மேல்
திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ்விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதிதன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’
என்றும், ‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக்
கழித்துச் சிலரைக் கூட்டிக்
_____________________________________________________
1. இங்கு ‘ஓதியுணர்ந்தவர்’
என்றது, அவர்களுடைய மஹாத்மியத்தைச் சொல்ல
வந்ததன்று; தௌராத்மியத்தைச் சொல்ல வந்தது.
2. செவிப்பறை
பறைந்து - ஏகாந்தமாகச் சொல்லி; ‘இரகசியமாகச் சொல்லி’
என்றபடி. ‘ஆறெழுத் தடக்கிய
அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின்
நவிலப் பாடி’ (திருமுருகாற். 186, 187.) என்றார்
பிறரும்.
3. ‘மனிசரே’ என்பதில்
ஏகாரம்: எதிர்மறை. ‘மனிதர் அல்லர்’ என்றபடி.
அதற்குப் பிரமாணம், ‘மானிடவரல்லர்’ என்னும்
பாசுரம். இது,
பெரிய
திருமொழி, 11. 7
: 9. இதற்கு,
ஈட்டு வியாக்கியானத்திலுள்ள பொருள் பின்
வருமாறு: ‘மனிதப் பிறவிக்கும் பலம் பகவானை
அடைதலேயாயிருக்க, அது
இல்லாதார் மனிதரே அல்லர்’ என்கிறார்; இனி, ஈசுவரன் கிருபையாலும்
செய்யலாவதில்லை;
‘செம்பிலும் கல்லிலும் வெட்டிற்று’ என்னுமாறு போன்று.
என்றது, ‘ஈசுவரன் கை விட்டாலும் விடாத
என் நெஞ்சிலும் அவர்களை
உபேக்ஷித்தேன் என்கிறார்,’ என்றபடி.
4. ‘விபூதியடங்கலும்
உத்தேஸ்யமாக அனுபவித்தவர் இப்போது சிலரை
உத்தேஸ்யராகவும் சிலரை உத்தேஸ்யரல்லராகவும்
அநுசந்திப்பது முரண்
அன்றோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘மேல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி.
|