|
பெ
பொ-ரை :
புனங்களிலே இருக்கின்ற பூக்களையுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனே! தாமரைப்பூவில்
வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார் வாழ்கின்ற மார்பையுடையவனே! எல்லா உலகங்களிலும்
ஓதுகின்றவர்களாலே ஓதப்படுகின்ற பல்வேறு வகைப்பட்டிருக்கின்ற வேதங்கள் முதலான எல்லாச்சாத்திரங்களும்,
சாதுவான நின்னுடைய கல்யாணகுணங்களின் தன்மையே அல்லாமல் வேறில்லை; அங்ஙனமிருக்க, யான்
எதனைச் சொல்லி வாழ்த்துவேன்?
ஈடு : ஆறாம்
பாட்டு. 1எங்குலக்க ஓதுவன்?’ என்றார்; ‘வேதங்கள் நம்மைப் பேசாநின்றனவே,
உமக்குப் பேசத் தட்டு என்?’ என்ன, ‘அவையும் இவ்வளவன்றோ செய்தது?’ என்கிறார்.
ஓதுவார் ஓத்து எல்லாம்
- ஓதுவார் என்கையாலே, அதிகாரிகளின் பாகுபாட்டினைச் சொல்லுகிறது. ஓத்தெல்லாம் என்கையாலே,
இருக்கு முதலான நான்கு வேதங்களையும் குறிக்கிறார். ஆக, ஓதுவார்கள் பேதத்தாலே பல வகைப்பட்ட
கிளைகளாய்ப் பிரிவுண்ட வேதங்களெல்லாம் என்றபடி. 2எவ்வுலகத்து எவ்வெவையும் -
எல்லா உலகங்களிலுமுண்டான எல்லாம். சுவர்க்க லோகத்திலும் பிரஹ்மலோகத்திலும் அங்குள்ள
புருஷர்களுடைய ஞானத்தின் மேம்பாட்டிற்குத் தக்கபடியே அவையும் பரந்திருக்குமேயன்றோ? ஸ்ரீராமாயணம்
என்றால் பிரஹ்மலோகத்தில் அநேகம் கிரந்தங்களாக இருக்கவும், இங்கே இருபத்து நாலாயிரமாய்
இருக்கின்றது; ஆதலின், ‘எவ்வுலகத்து எவ்வெவையும்’ என்கிறார். சாதுவாய் - சொற்களுக்குச் சாதுத்தன்மையாவது,
பொருளைக் காட்டவற்றாயிருக்கை. அன்றி, ‘சாதுவான புகழ்’ என்று குணங்கட்கு அடைமொழியாக்குதலும்
ஆம். சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை - உன்னுடைய கல்யாண குண விஷயமான இத்தனை
போக்கிப் புறம்பு போயிற்றில்லை;
__________________________________________________
1. ‘நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை’ என்றதனைக் கடாக்ஷித்து வினா
விடை மூலமாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘அவையும் இவ்வளவன்றோ
செய்தது?’ என்றது, ‘நின் தகையல்லால் பிறிதில்லை’ என்றதனைத்
திருவுள்ளம்
பற்றி.
2. ‘எவ்வுலகத்து எவ்வெவையுமான ஓதுவார் ஓத்தெல்லாம்’ என மாறுக.
|