பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
179

புக

புகாமலும் உலக மக்கள் சிரிக்கும்படியாக நின்று ஆடி அன்பு பெருகி நடனம் செய்கின்றவர்கள் தேவர்களாலே தொழப்படுவார்கள்,’ என்கிறார்.

    வி-கு : ‘புக்கும் புகாதும் எந்தையின் பெயர்களைச் சொல்லிப் பிதற்றி நின்று ஆடிப் பெருகிக் குனிப்பவர் அமரர் தொழப்படுவார்,’ என்றும், ‘பித்தர் என்றே பிறர் கூற உலோகர் சிரிக்க நின்று ஆடிக் குனிப்பவர்’ என்றும் கூட்டுக. ‘வடக்கின்கணுள்ள திருவேங்கடம்’ என்க. அமரர் - ‘அமரர்களால்’ என மூன்றனுருபு விரிக்க.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்? நித்தியசூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.

    வார் புனல் அம் தண் அருவி வடக்குத் திருவேங்கடத்து எந்தை - ஒழுகாநின்றுள்ள புனலையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், சிரமத்தை நீக்குவதாயுள்ள அருவிகளையுடைத்தான வடக்குத் திருமலையில் வந்து நின்றான் என் ஸ்வாமி. பேர் பல சொல்லிப் பிதற்றி - அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. 2சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, 3தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார் என்றபடி. பித்தர் என்றே பிறர்கூற - பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாதவர்களாய் இருக்குமவர்கள், ‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு

____________________________________________________ 

1. ‘திருவேங்கடத்து எந்தை - ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர்
  தொழப்படுவாரே,’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’
  என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,
  ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
  ‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’
  என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும்
  நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.

3. ‘தாம் ... சொன்னவற்றைச் சொல்லுகிறார் என்றபடி’ என்றது, ‘தாம்
  சொன்னாற்போன்று சொல்லி’ என்றபடி.