|
New Page 1
வேண்டும் என்று நம்மை
வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு
நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள் எல்லாரும் நம்
வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு. 1‘சங்கல்பத்துக்குத்
தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத்
தகுதியாக’ என்பது, பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார
விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண
விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்; விபவங்களில் வந்தால் அதுதன்னைத் தன்னின் வேறுபட்ட
மற்றைச் சாதிகட்குத் தகுதியாக ஆக்கிற்றாய் இருக்கும்; இங்ஙன் அன்றிக்கே, 2அடியவன்
தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே தனக்குத் திருமேனியாகக்
கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி, இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய்
இருப்பது இந்நிலை.
மேலும், தன்னினின்றும்
வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை
முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன், தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய
அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை
அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே, இங்கே
அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய்
அதற்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின்
ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய், இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனான
____________________________________________________
1.
ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.
2. ‘தனக்கோர் வடிவம்
பெயரும் இன்றி அன்பராயினார் கருதிய வடிவே
வடிவாகவும் அவர் இட்ட பெயரே பெயராகவுமுடையவனாதலின்,
‘முக்கை
முனிவ’ என்பது முதலாக ‘நூறாயிரங் கை ஆறறி கடவுள்’ என்பது ஈறாக
வடிவு வேற்றுமையும் பெயர்
வேற்றுமையும் சொல்லப்பட்டன.’’ என்பர்
பரிமேலழகர்.
(பரிபா. 3. பா. உரை.)
|