|
என
என்றும், நாய்ச்சிமாராலும்
உணர்த்த ஒண்ணாதிருத்தலின் ‘அமருந்துயில்’ என்றும், பாம்பினைப் படுக்கையாக உடைமையால்
வந்த முதன்மையாகிய உறைப்பை உடையவனாதலின் ‘அண்ணலை’ என்றும் அருளிச்செய்கிறார்.
இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ - 1‘காலம் நடையாடாத
தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச்
சொல்லுகிறது?’ என்கிறார். ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’
என்கிறார். 2‘துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும்
என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார். ‘நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே
வேண்டுவது; விஷயம் தன்னடையே கொண்டு முழுகும்,’ என்பார், ‘மனம் வைம்மினோ’ என்கிறார்;
‘நீங்கள் ஏத்த என்று ஒருப்படுமித்தனையே வேண்டுவது; பின்னை உங்களுக்கு உபதேசிப்பார் வேண்டா,’
என்றபடி.
3‘நித்தியசூரிகள்
ஏத்தும் விஷயத்தை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? அறப் பெரியவனை அன்றோ நான்
உங்களை ஏத்தச் சொல்லுகிறது? நீங்கள் ஏத்துகிற இது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற
இருக்கிறவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? உங்களுடைய விலக்காமையே பற்றாசாக
வந்து கலக்குமவனை அன்றோ நான் உங்களை ஏத்தச் சொல்லுகிறது? 4யாதாயினும் நேர்ந்து
அணுக வேண்டும் வடிவழகையுடையவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது? சேஷசயனத்தை
____________________________________________________
1. காலம் நடையாடாத
தேசம் - பரமபதம்
2. இருக்கு வேதம்
3. பாசுரம் முழுதினையும் திருவுள்ளம்
பற்றி அருளிச்செய்கிறார், ‘நித்திய
சூரிகள்’என்று தொடங்கி. ‘பரவி வானவர் ஏத்த நின்ற’
என்றதனை
நோக்கி, ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கும் முதல் வாக்கியம் எழுகின்றது;
‘பரமனை’ என்றதனை நோக்கி, ‘அறப்பெரியவனை’ என்ற இரண்டாம்
வாக்கியத்தை அருளிச்செய்கிறார்;
‘பரஞ்சோதியை’ என்றதனை நோக்கி,
‘நீங்கள் ஏத்துகிற’ என்று தொடங்கும் வாக்கியத்தை
அருளிச்செய்கிறார்.
இங்ஙனமே ஏனையவற்றையும் பகுத்துக்காண்க.
4. ‘யாதாயினும் நேர்ந்து
அணுக வேண்டும்’ என்றது, ‘யாதாகிலும் ஒன்றைச்
செய்தாயினும் கிட்ட வேண்டும்’ என்றபடி. ‘யாதானும்
ஒன்று அறியில்’
என்னும் பாசுரத்தை அடியாகக் கொண்டு எழுந்தது இது.
(பெரிய
திருவந். 33.)
|