|
New Page 1
நும் மனத்தே வைம்மின்
என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை - உம்முடைய மனத்திலே வையுங்கோள் என்று நான்
சொல்லுகின்ற ஆச்சரியமான அழகு குணம் செயல்களையுடையனானவனுடைய சீலத்தன்மையை. அன்றியே,
1‘மாயவன் சீர்மை’ என்றதனால், ‘அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள்
எல்லாம் வந்து பற்றும்படியாக அன்றோ அவனுடைய பெருமை’ என்று, பற்றுவதற்கு உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச்
சொல்லிற்றாகவுமாம். எம் அனோர்கள் உரைப்பது என் - எம் போல்வார் சொல்ல வேண்டுவது என்?
‘நாங்கள் சொன்னவாறே பத்திரபாரவஸ்யத்தாலே சொன்னோம்,’ என்பார்கள். அது நிற்க - அது
கிடக்க.
நாள்தொறும் வானவர்தம்மை
ஆளுமவனும் நான்முகனும் சடைமுடியண்ணலும் செம்மையால் அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர்
- அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வேறு ஒரு பயனையும் கருதாதவரைப்
போல வந்து பற்றும்படியன்றோ அவனுடைய சீலத்தன்மை இருப்பது? அன்றியே, ‘அதிகாரி புருஷர்களான
பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படி அன்றோ அவன் பெருமை?’ என்று பற்றுவதற்கு
உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகிறது.
நாள்தொறும் வானவர்தம்மை
ஆளுமவனும் - தேவர்களைச் 2சனியும் புதனும் மெய்க்காட்டுக்கொண்டு அவர்கள் மிகுதி
குறைகள் ஆராய்ந்து செல்லுகின்ற இந்திரனும். நான்முகனும் - பதினான்கு உலகங்களையும் படைத்தவனான
பிரமனும். சடை முடி அண்ணலும் - தவவேடம் கிடக்கவும் ஈசுவரனாகச் செருக்குக் கொண்டவனான உருத்திரனும்.
அவன் பாத பங்கயம் நாள்தொறும் சிந்தித்து ஏத்தித் திரிவர் - வேறொரு பயனையும் கருதாதவர்களைப்
போலே அவன் திருவடிகளை நினைந்து, அந்நினைவுவழிந்து புறப்பட்ட சொல் என்று தெரியும்படி ஏத்தி,
அத்தாலே தரித்துக் கால்நடை தந்தாராய்ச் சஞ்சரியாநிற்பர்கள், 3‘பாடித்
_____________________________________________________
1. ‘சீர்மை’ என்பதற்குப்
பரத்துவ சௌலப்யங்கள் இரண்டையும் பொருளாக
அருளிச்செய்கிறார், இரண்டு குணங்களும் ஈசுவரனை
அடைவதற்கு
உறுப்பாகையாலே.
2. சனியும் புதனும்
- சனிக்கிழமையும் புதன் கிழமையும்.
மெய்க்காட்டுக்கொண்டு - எண்ணிக்கொண்டு.
3.
கண்ணி நுண்சிறுத்தாம்பு,
2.
|