|
கள
களிலே அணையும்படியாக நின்ற
சிவந்த கண்களையுடைய மால், நாற்றம் உருவம் சுவை ஒலி ஊறு இவை ஆகின்ற எம் வானவர் ஏறு ஆகிய
இறைவனையே அன்றிக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் வேறொரு தெய்வத்தை யான்
உடையேன் அல்லேன்.
வி-கு :
தோற்றம் - தோன்றுதல்; பிறவி. மூன்றாமடியிலுள்ள ‘தோற்றம்’ என்பதற்குத் ‘தோன்றும்
உருவம்’ என்பது பொருள். உறல் - உறுதல்; பரிசம். ஏறு - ஏறு போன்றவன்; ஏறு - இடபம்.
‘எழுமைக்கும்’ என்பது, ஈண்டு ‘எப்பொழுதும்’ என்னும் பொருளைக் குறித்தது.
ஈடு : ஆறாம்
பாட்டு. 1‘இவர்களைப் போலே கேட்க இராமல் உபதேசம் வேண்டாமலேயே நித்தியசூரிகளைப்
போலே, தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக
உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.
தேரற்றம் கேடு
அவை இல்லவன் - தோன்றுதல் அழிதல் அவை இல்லாதவன். மற்றை விகாரங்களையும் உபலக்ஷணத்தாற்கொள்க.
உடையான் - தோற்றக்கேடுகள் உள்ள ‘பொருள்களை எல்லாம் தனக்கு அடிமையாக உடையவன். 2‘நிருபாதிக
சேஷி’ என்றபடி. அவன் ஒரு மூர்த்தியாய் - கர்மம் அடியான பிறவி இல்லாதவன் அடியவன்பொருட்டு
ஒரு விக்கிரஹத்தையுடையனாய். ஒப்பான பொருள் இல்லாததாய் மிகச்சிறந்த அழகினையுடையதாய் உள்ள
நரசிம்ஹமாதலின் ‘ஒரு மூர்த்தியாய்’ என்கிறது. 3‘அழகியான் தானே அரியுருவன்
தானே’ என்றார் திருமழிசைப்பிரான். சீற்றத்தோடு
_____________________________________________________
1. நாலாம் அடியைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘இவர்களை’ என்றது, சமுசாரிகளை. பரோபதேசம் செய்துவரும்
பிரகரணத்திலே ‘மற்றொருவரை யானிலேன் எழுமைக்கும்’ என்று தம்
நிலையை அருளிச் செய்கிறார்.
தம்மைப்போலே சமுசாரிகளும் இருக்க
வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி.
இப்பாசுரத்தின் முதலடியில்,
பகவத்கீதை
நாலாம் அத்தியாயம் ஆறாம்
சுலோகத்தின் பொருள் சொல்லப்படுகிறது என்று அருளிச்செய்வர்.
2. நிருபாதிகசேஷி
- ஒரு காரணத்தால் வந்த தலைவன் அல்லாதவன்;
‘இயல்பாகவே தலைவனாய் உள்ளவன்’ என்றபடி.
3.
நான்முகன்
திருவந். 22.
இது, ‘நரசிம்ஹமானது அத்விதீயமாய்
அத்யந்த
விலக்ஷணமாயிருக்கும்,’ என்பதற்குப் பிரமாணம்.
|