| 
சுப
 
சுபாவிகமான கல்யாண குணம் 
மாசு உண்ணாதோ! 1’இவர்கள் ஏத்துமளவேயோ இவன் குணங்கள்!’ என்ற அவ்வழியாலே தாழ்வாய்த் 
தலைக்கட்டாதோ?’ என்றபடி. 
(7) 
230 
  
    
மாசூணாச் சுடர்உடம்பாய் 
    மலராது 
குவியாது 
மாசூணா ஞானமாய் 
    முழுதுமாய் 
முழுதுஇயன்றாய் 
மாசூணா வான்கோலத்து 
    அமரர்கோன் 
வழிப்பட்டால் 
மாசூணா உனபாத 
    மலர்ச்சோதி 
மழுங்காதே? 
     
   
 
    
பொ-ரை :
‘எக்குற்றங்களுமில்லாத 
பேரொளி வடிவினனாய்’ விரிதல் சுருங்குதல் இன்றிக் குற்றமில்லாத ஞானத்தையுடையனாய், உலகமே 
உருவனாய், எல்லாவற்றையும் நிர்வஹிக்கின்றவனே! குற்றமில்லாத ஞானத்தையுடைய பிரமன் துதித்தால், 
குற்றமில்லாத உன்னுடைய திருவடிகளில் பரந்திருக்கின்ற ஒளி குறையாதோ!’ என்கிறார். ‘குறையும்’ 
என்றபடி. 
    வி-கு :
கோலம் - அழகு; அது, ஈண்டு ஞானத்தை உணர்த்திற்று. அமரர் கோன் - ஈண்டு, பிரமனைச் 
சுட்டுகிறது. 
    ஈடு : எட்டாம் 
பாட்டு. மேற்பாசுரத்தில், சிவன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்கள் என்றார்; இப்பாசுரத்தில், 
‘சிவன் தனக்குங்கூடத் தந்தையான பிரமன் துதித்தாலும் அதுவும் உனக்குத் தாழ்வாம்,’ என்கிறார் 
என்பாருமுளர். ‘அவனையும் மேற் பாசுரத்திலே அருளிச்செய்தாராய், இப்பாசுரத்தில் 
2உபய 
பாவனையுமுடைய அப்பிரமனைப் போலன்றிக் கேவலம் பிரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு பிரஹ்மாவைக் 
கற்பித்து, 
_____________________________________________________ 
 
1. ‘துதித்தால் 
மாசு உண்பான் என்?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி 
  அதற்கு விடையாக, ‘இவர்கள் ஏத்தும்’ 
என்று தொடங்கி அருளிச் செய்கிறார். 
2. உபய பாவனை - 
கர்ம பிரஹ்ம பாவனைகள். கர்ம பாவனை - கர்மா 
  நுஷ்டாநம்; பிரஹ்ம பாவனை - உபாசனம். கர்ம 
பாவநா நிஷ்டர் - தக்ஷன் 
  முதலியோர்; பிரஹ்ம பாவநா நிஷ்டர் - சனகன் முதலியோர்; உபய பாவநா 
  நிஷ்டன் - பீரமன். ‘மாசூணா வான் கோலத்து அமரர்கோன்’ என்றதனைத் 
  திருவுள்ளம் பற்றிப் 
‘பிரஹ்மாவைக் கற்பித்து’ என்கிறார். 
 |