பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
211

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள், உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.

    எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை - காலம் என்னும் பொருள் உள்ள வரையிலும் தன் 2சுவடு அறியாமல் இதர விஷயங்களில் ஈடுபாடு உள்ளதான என் நெஞ்சுக்கு மிக இனிய பொருள் ஆனவனை. 3பெரியனவற்றை ஏழாகச் சொல்லுதல் மரபு; ‘காலமெல்லாம்’ என்றபடி. எனது உயிர் கெழுமிய கதிர்ச்சோதியை - அநாதியாகப் பிறந்து இறந்து போந்த என் ஆத்துமாவோடே கலந்து அத்தாலே பேரொளியன் ஆனவனை. 4தாம் கிட்டுகை இறைவனுக்கு நிறக்கேடு என்று இருந்தார் இவர்; அது மற்றைப்படியாய்த் தம்மைச் செறியச் செறியப் பேரொளியனாய் இருந்தானாதலின், ‘கெழுமிய கதிர்ச்சோதியை’ என்கிறார். மணி வண்ணனைக் குடக்கூத்தனை - வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் - நிறம். இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம். 5இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.

    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை - உண்டாக்கப்பட்ட தேவர்கள் அன்றிக்கே சீரியரான வைகுந்தத்து அமரர்க்கும் முனிவர்க்கும் கன்னல் போலவும் கனி போலவும்
_____________________________________________________

1. ‘குடக்கூத்தனைத் தூய மனத்தராய்த் தொழுமின்; இறையும் நில்லா
  துயரங்கள்,’ என்பதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. சுவடு - இனிமை.

3. "எழுமைக்கும்’ என்பது, காலமென்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்
  என்ற பொருளைக் காட்டுவது கூடுமோ?’ என்னும் வினாவைத்
  திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடையாகப் ‘பெரியனவற்றை’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார். 210ஆம் பக்கம் குறிப்புப் பார்க்க.

4. ‘தாம் கிட்டுகை நிறக்கேடு என்றிருந்தார்,’ என்றதன் பொருளை
  ‘வளவேழுலகின்’ என்ற திருவாய்மொழியின் பொருளால் உணரலாகும்.

5. ‘மணி வண்ணனைக் குடக்கூத்தனை, விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்
  கன்னற்கனியினை’ என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஏதுக்கள்
  இருக்கிறபடி’ என்று.