பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
215

உடல

உடல் ஒழிய ஓடும்போது ஓடி அயர வென்ற தீர்க்குமவனே அன்றோ? ‘எங்ஙனே கண்டோம்?’ என்னில், தயரதற்கு மகன் தன்னை - தான் அரசு செலுத்தாநிற்கச்செய்தே ஒரு பிராஹ்மணனுடைய குமாரனுக்கு அகால மரணம் உண்டாக, 1அவனை வாளாலே மீட்டும்; இராவணனைக் கொன்ற பின் 2படைக்குறி காணாநிற்கிற அளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய, 3இந்திரனை அழைத்துப் போகவிட்டு வரங்கேட்கிற வியாஜத்தாலே அவனை இடுவித்து அவர்களையும் கூட்டிக்கொண்டு போன சக்கரவர்த்தி திருமகனை; 4ஒரு முனிவனுடைய புத்திரனுக்கு அகால மரணம் வர, அப்பாலே மீட்டுக்கொடுத்தும் செய்தவை. ‘தயரதன் மகன்’ என்னாதே, 5தயரதற்கு மகன்தன்னை’ என்கிறது, ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’ என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்.
_____________________________________________________

1. ‘அவனை வாளாலே மீட்டும்’ என்றது, சம்புகனை வாளாலே கொன்று
  அவனை மீட்டும் என்றபடி. இச்சரிதையைக் கம்பராமாயணம்,
  உத்தரகாண்டம், சம்புவன் வதைப்படலத்தால் உணரலாகும்.

2. படைக்குறி - சேனையைச் சரி பார்த்தல். முதலிகள் - வானரங்கள்

3. உயுத்த காண்டம். மீட்சிப்படலம், 134 முதல் 138 முடியவுள்ள
  செய்யுள்களில் இங்குக் கூறப்படும் பகுதியைக் காண்க.

4. ‘முனிவன்’ என்றது, சாந்தீபினி முனிவனை. அம்பாலே மீட்டது,
  கிருஷ்ணாவதாரத்தில்; தர்ம்யைக்யத்தாலே அதனையும் இங்கு அருளிச்
  செய்கிறார்.

5. ‘தயரதற்கு மகன்தன்னை’ என்பதற்கு எழுதும் விசேடப் பொருள்
  நினைவில் இருத்தற்குரியது. ஆறாம் வேற்றுமைக்கு உடைமைப் பொருள்
  உரியதாதலின், அதனைத் திருவுள்ளத்தே கொண்டு இவ்விசேடப்
  பொருளை எழுதுகிறார் வியாக்கியாதா. உயர்திணையாதலின், ‘தயரதற்கு
  மகன்’ என நான்காம் வேற்றுமை கொடுத்து அருளிச்செய்தபடி.

  ‘அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
  அதுவென் னுருபுகெடக் குகரம் வருமே.’

  என்பது இலக்கணம்.

(தொல். சொல். 94.)

      ‘வெற்றிலைச் செருக்கு’ என்றது, ‘வெற்றிலை தின்னும்போது உண்டாகும்
  செருக்கு’ என்றபடி. பக். 146 காண்க.