|
ம
மாறு போன்று, வடிவிலே
துவக்கு உண்பாரை வளைத்துக்கொள்வது கண் அழகாயிற்று. ஒரு சுடர்க்கடல் போலே ஆயிற்று வடிவு; அது
பரப்பு மாறத் தாமரை பூத்தாற்போலே ஆயிற்றுக் கண் அழகு. வடிவுதானே கவரும் தன்மையது? அதற்கு மேலே
அகவாயில் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கும் பிரகாசகமாய் இருக்குமன்றோ திருக்கண்கள்? ஆக,
‘என்றும் உள்ளதாய் எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத்தையும் அதிலும் கவர்ச்சிகரமான கண்ணழகையுடையவனை’
என்றபடி.
பயில இனிய நம்
பாற்கடல் சேர்ந்த பரமனை - இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவு அற்று இருக்கையாலே இனியதாய்
இருக்குமன்றோ? 1இதர விஷயங்கள் கிட்டுந்தனையும் ஒன்று போலேயாய்க் கிட்டினவாறே
அகல வழி தேடும் படியாயிருக்கும் ஆதலின், ‘பயில இனிய’ என்கிறார். என்றது, ‘அவற்றினுடைய
தாழ்வினை அறிகைக்கும் அங்கே செறிய அமையும்; பகவத்விஷயத்தினுடைய என்றும் உள்ளதாய் அடையக்கூடியதாய்
இருக்குந்தன்மையை அறிகைக்கும் அங்கே நெருங்க அமையும்,’ என்றபடி. ஆகையாலே அன்றோ இவ்வஸ்து நித்தியமாய்
அடையக் கூடியதாய் இருக்கிறது?
_____________________________________________________
1. ‘இனி, இடையாயினார்,
‘பெண் என்பது எற்புச்சட்டகம்: முடைக் குரம்பை;
புழுப்பிண்டம்; பைம்மறியா நோக்கப் பருந்தார்க்கும்
தகைமைத்து; ஐயும்
பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திரபுரீடங்களும்
என்று
இவற்றது இயைபு; பொருளன்று; பொருளாயின், பூவே சாந்தே பாகே
எண்ணெயே அணிகலனே என்றிவற்றால்
புனைய வேண்டாவன்றே, தான்
இயல்பாக நன்றாயின்?’ என்று அசுபத்தன்மை உரைப்பக் கேட்டு நீங்குவர்,’
என்பது
இறையனார் களவியலுரை.
'வினையின் வந்தது: வினைக்குவிளை
வாயது;
புனைவன நீங்கின்
புலால்புறத் திடுவது;
மூத்துவிளி வுடையது;
தீப்பிணி யிருக்கை;
பற்றின் பற்றிடம்;
குற்றக் கொள்கலம்;
புற்றடங் கரவின்
செற்றச் சேக்கை;
அவலக் கவலை கையாறு
அழுங்கல்
தவலா உள்ளம் தன்பா
லுடையது;
மக்கள் யாக்கை
யிதுவென உணர்ந்து
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்’
என்பது,
மணிமேகலை,
4 : 113 - 121.
|