|
ஈ
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘அவனுடைய அவயவங்களின் வனப்பிற்குத் தோற்றிருக்குமவர்கள் எனக்கு நாதர்,’
என்கிறார்.
ஆளும் பரமனை -
1நாம் உகந்ததை உகக்கிறோம்: இவ்வாத்துமாவை ஆளுமிடத்தில் இங்ஙனம் அவனைப்
போன்று ஆள வல்லார் இலர்; ‘ஆயின், இறைவன் இவ்வாத்துமாவை அடியார்க்கு ஆட்படுத்தி
ஆள்வானோ?’ என்னில், 2‘அடியார்கட்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன்’
என்னக்கடவது அன்றோ? 3‘இவ்வுகப்புக்கு அடி அவன்,’ என்கிறார். 4அடியாரை
விரும்புவது அவன் அடியாக அன்றோ? 5கண்ணனை - ஆட்செய்து அடிமை கொள்ள வல்லார்
அவனைப் போன்றார் இலர். ‘அப்படி ஆட்செய்து அடிமை கொண்டானோ?’ என்னில், 6‘அஞ்சேல்
என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’ என்றும்,
____________________________________________________
1. மேற்பாசுரத்தில்,
அடியாரை ‘ஆளும் பரமர்’ என்றார்; இப்பாசுரத்திலும்
இறைவனை ‘ஆளும் பரமன்’ என்கிறார்; இது என்?’
என்னும் வினாவைத்
திருவுள்ளம் பற்றி அதற்கு விடையாக, ‘நாம் உகந்ததை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார், என்றது, ‘நாம் அவனை விட்டுப் பாகவதர்களையே
உகந்தோமாகிலும், இவ்வஸ்துவை
ஆளுமிடத்தில் நம்முடைய
நினைவின்படியே பாகவதர்கட்கு அடிமையாக்கி, அவர்களே ‘பரமப்
பிராப்ய
பிராபகர்’ என்னும் நினைவைப் பிறப்பித்து. அடிமை கொள்வான்
அவனை ஒழிய வேறு ஒருவர் இலர்,’
என்றபடி. இதனால், மேலே போந்த
ஐயத்துக்கு விடையாக, பாகவதர்களை விரும்புகிறதும், அவனுடைய
கிருஷியாலே வந்ததாகையாலே, இறைவனை ‘ஆளும் பரமன்’ என்கிறார்
என்றருளிச்செய்தபடி.
2.
அமலனாதிபிரான், 1.
3. இவ்வுகப்புக்கு - பாகவதர்களே
உத்தேசியர் என்று நினைத்திருக்கின்ற
மகிழ்ச்சிக்கு.
4. ‘அப்படி அடியாரை
விரும்புகைக்குக் காரணம் ஈசுவரன் ஆவனோ?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடையாக,
‘அடியாரை’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
5. அப்படி அடிமை
கொள்ளுமிடத்துப் பரதந்திரனாய் நின்று அடிமை
கொள்ளுவான் இறைவன் என்பது ‘கண்ணன்’ என்ற
சொல்லால்
சித்திக்கிறது என்று திருவுள்ளம் பற்றிக் ‘கண்ணனை’ என்பதற்குப்
பொருள் அருளிச்
செய்கிறார், ‘ஆட்செய்து’ என்று தொடங்கி.
6.
பெரிய திருமொழி, 8. 9 : 6.
|