பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
251

    பாதம் பணிய வல்லாரை - இவ்வழகைக் கண்டு இதிலே அசூயை பண்ணாதே, இதிலே தோற்றுத் திருவடிகளிலே விழ வல்லவர்களை. ‘இறைவன் விஷயத்திலே அசூயை பண்ணுவர்களோ?’ எனின், விஷயத்தைப் பாராதே அன்றோ அசூயை பண்ணுகிறது? சர்வேசுவரனும் 1‘அசூயை இல்லாத உன்பொருட்டுச் செவ்வையாய்ச் சொல்லுகிறேன்.’ என்றும், 2‘யாவன் ஒருவன் என்னை நிந்திக்கிறானோ, அவனுக்குச் சொல்லத் தக்கது அன்று,’ என்றும் அருளிச்செய்தான் அன்றோ? ‘ஆயின், இறைவனிடத்தில் அசூயை இல்லாமல் இருப்பது அருமையோ?’ எனின், முன்புள்ளார் அநுஷ்டிக்கையாலே நமக்கு எளிதான இத்தனை அல்லது, புறம்புள்ளார் பக்கலிலே அன்றோ இதன் அருமை தெரிவது? வல்லாரைப் பணியுமவர் கண்டீர் - ஈசுவரன் பக்கல் உட்பட அசூயை பண்ணாநின்றால் அடியார் பக்கல் சொல்ல வேண்டுமோ? இறைவன் பக்கல் அவனுடைய பெருமையாலே வணங்கவுமாம்; 3’நான் ஒருவருக்கும் உரியன் அல்லேன்,’ என்று இருக்கவுமாம்; சோறு தண்ணீர் முதலியவற்றாலே தரிக்கிற இவர்கள் பக்கல் பணிய மனம் பொருந்தாதே அன்றோ? தோன்றுகிற உருவத்தைப் போகட்டு அடியராய் இருக்கின்ற தன்மையையே பார்த்து விரும்பும்போது அதற்குத் தக்க 4அளவு உடையவனாக வேண்டும்; ஆதலின், ‘வல்லாரைப் பணியுமவர் கண்டீர்’ என்கிறார்.

    ‘ஆயின், அவதரித்துச் சுலபராய் இருக்கிறவர்களைத் தோன்றுகின்ற வடிவத்தை நோக்கி வெறுக்கக் கூடுமோ?’ எனின் சௌலப்யந்தானே நறுகு முறுகு என்று முடிந்து போகைக்கு உடலாயிற்று அன்றோ சிசுபாலன் முதலியோர்கட்கு? 5பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டால் ஆயிற்று; அங்கே கேள்,’

_____________________________________________________

1. ஸ்ரீ கீதை, 9 : 1.

2. ஸ்ரீ கீதை, 18 : 67.

3. ஸ்ரீராமா. யுத்.

4. அளவுடையவனாக - ஞானமுடையவனாக. அளவு - ஞானம் நறுகு முறுகு
  - பொறாமை.

5. பாகவத சேஷத்துவம் அருமையிலும் அருமை என்பதற்கு ஓர் ஐதிஹ்யம்
  அருளிச்செய்கிறார், ‘பிள்ளையாத்தான்’ என்று தொடங்கி.