|
எல
எல்லாம் வேண்டினபடி
அனுபவிக்கலாம் அன்றோ? 1மின்மினி பறவாநிற்கிறதாதலின்,
‘மற்றும் பல் கலன்’
என்கிறார்.
அன்றிக்கே, ‘அளவு இறந்தன ஆகையாலே முடியச் சொல்லமாட்டார்; ஆகையாலே, சொல்லாதொழிய மாட்டார்;
இதுவன்றோ படுகிற பாடு!’ என்னுதல்.
திரு நாரணன் -
2அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலேகாணும்; ‘உன் திருமார்வத்து
மாலை நங்கை’ என்பர் மேல். அன்றிக்கே, 3‘திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய
சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே, இம்மிதுனமே உலகத்துக்குச்
சேஷி என்கிறார்,’ என்னுதல். தொண்டர் தொண்டர் கண்டீர் - இறைவனாந்தன்மைக்கு எல்லை அம்மிதுனமாய்
இருப்பது போன்று, அடிமையாம் தன்மைக்கும் எல்லையாய் இருக்கிறவர்கள். இடையார் பிறப்பிடைதோறு
எமக்கு எம் பெருமக்களே - உச்சிவீடும் விடாதே நடு நெருங்கி வருகின்ற பிறவிகளில் இடங்கள்தோறும்
4ஓர் ஒப்பனையால் அன்றிக்கே வெறும் புறத்திலே நமக்குத் தலைவர்கள்; அன்றிக்கே,
‘ஸ்ரீமானான நாராயணனுக்கு அடிமை புக்கிருப்பார்க்கு ‘இச்சேர்த்தி அறிந்து இவர்கள் பற்றுவதே!’ என்று
அடிமை புக்கார்க்கு அடியேன் என்கிறார்,’ என்னுதல். அவர்கள், எங்
____________________________________________________
1. மற்றை அணிகளையும்
விதந்து கூறாது, ‘மற்றும்’ என்று தொகுத்து
அருளிச்செய்வது என்னை?’ என்னும் வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘மின்மினி’ என்று தொடங்கி. மின்மினி பறத்தல் - வெறியோடுகை; என்றது,
‘கண்வெறித்துப்போதல்’. ‘கண் வெறி ஓடுதலாலே அருளிச்செய்கிறார்’
என்றபடி.
2. அணிகலன்களைச்
சொல்லுகிற இடத்தில் பிராட்டியை அருளிச்செய்வதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அங்குத்தைக்கு’
என்று தொடங்கி.
‘திருவாபரணங்களோடு சேர்த்துச் சொல்லப்படுகையால் பிராட்டியையும்
திருவாபரணவகையில்
கோடல் வேண்டும்,’ என்பதாம். அதற்குக் காட்டும்
பிரமாணம், ‘உன் மார்வத்து மாலை நங்கை’
என்பது. இது,
திருவாய்.
10. 10 : 2.
3. ‘திரு’ என்பதனை
ஆபரணகோடியிலே சேர்த்து அருளிச்செய்தார் மேல்.
‘திரு’ என்பதனை ‘நாரணன்’ என்ற பதத்தோடே
கூட்டிச் சேஷித்வத்திலே
நோக்காக அருளிச்செய்கிறார், ‘திருவாபரண ஆழ்வார்களாகிறார்’ என்று
தொடங்கி. மிதுனம் - இரட்டை. சேஷி - இறைவர்.
4. 'ஓர் ஒப்பனையால்
அன்றிக்கே’ என்றது, ‘ஓர் ஒப்பனை அழகினைக்
காண்பித்துத் தோற்பித்துச் சேஷியாதல் அன்றிக்கே’
என்றபடி.
|