பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
26

பெ

    பொ-ரை : ‘மறையாயிருக்கின்ற நான்கு வேதங்கட்கு உட்பொருளாய் நின்ற பரந்த ஒளியுருவனே! அவ்வக்காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் உண்டாக்கி, பிரளயத்தில் புக்கு இடந்து எடுத்து, பின்னர் மஹாபிரளயத்தில் புசித்து, பிரளயம் நீங்கிய பின்னர் வெளியில் உமிழ்ந்து, திருவடிகளால் அளந்தவனே! பிறைச்சந்திரனைத் தரித்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் ஆகிய இவர்கள், நீ தலைவனாக இருத்தலையறிந்து ஏத்தும்படி வேறொருவர்க்கு இல்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தலாகிய இது ஆச்சரியமோ!’ என்கிறார். ‘இன்று’ என்றபடி.

    வி-கு : மறை - தன் பொருளை மறைத்து வைத்திருப்பது. வேதம் - தன் பொருளையறிவிப்பது. வீற்றிருத்தல் - வேறு ஒருவர்க்கில்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தல்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1வேதங்களாலே அறியக்கூடியவனாய்ச் சர்வேசுவரனாயிருக்கிற உனக்கு, உன்னாலே படைக்கப் பட்டவர்களாய் உன்னாலே ஞானத்தைப் பெற்றவர்களாயுள்ள பிரமன் முதலான தேவர்கள், ‘ஈசுவரன்’ என்று அறிந்து ஏத்த இருக்குமது ஆச்சரியமோ!’ என்கிறார்.

    மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே - வேதங்களிலே எல்லாரைக்காட்டிலும் அதிகனாகவும் நிரதிசய போக்கியனாகவும் பிரகாசிக்கின்றவனே! புறம்பானவர்களாய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும், ‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச் சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்: முற்பகுதி - ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய், பிற்பகுதி - ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய், 2’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே, எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி இருக்கையாலே உண்டான புகரையுடை

_____________________________________________________

1. முதல் அடியை நோக்கி, ‘வேதங்களால் அறியக்கூடியவனாய்’ என்றும்,
  இரண்டாம் அடியை நோக்கிச் ‘சர்வேசுவரனாய்’ என்றும், மூன்றாம் அடியை
  நோக்கி, ‘உன்னாலே படைக்கப்பட்டவர்களாய் உன்னாலே ஞானத்தைப்
  பெற்றவர்களாய், என்றும், நான்காம் அடியை நோக்கி, ‘ஈசுவரன் என்று
  அறிந்து’ என்றும் அருளிச் செய்கிறார்.

2. ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 1 : 19.