பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
262

என

என்னைத் தனக்கே உரியவனாம்படி செய்தவனை; 1‘மணியை வானவர் கண்ணனை’ என்கிறபடியே, நித்தியசூரிகளை எழுதிக்கொண்ட 2படியே காணும் இவரையும் எழுதிக்கொண்டது; ‘படி கண்டு அறிதியே’ என்ற இடத்துப் படி என்பது ‘திருமேனி’ என்னும் பொருளாதல் காண்க. இதனால், மேலே போந்த ‘தோளும் ஓர் நான்குடைத் தூ மணி வண்ணன்’ என்ற பகுதியை நினைக்கிறது.

    ஒளிக்கொண்ட சோதியை - தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளி உருவமான விக்கிரகத்தையுடையவனை; இதனால், ‘பயிலும் சுடர் ஒளி’ என்ற பகுதியை நினைக்கிறது. உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர் - குணங்களை நினைத்து ஈடுபட்டவராய் வாய்விட மாட்டாதே இருக்குமவர்கள்தாம். எம்மைச் சலிப்பு இன்றி ஆண்டு - பகவானை அடைந்தால் பிரமலோகம் முதலான ஐஸ்வரியங்களைப் பெற்று மீளவுமாம்; அடியார்கட்கு அடிமை என்னும் அளவு ஆனால் ஆயிற்று மீளாதொழிவது; ஆதலின், ‘சலிப்பின்றி ஆண்டு’ என்கிறது.

    ‘ஆயின், அடியார்கட்கு அடிமை என்னும் அளவு சென்றும் மீளுகின்ற பேர் உளரே?’ எனின், மீண்டார்களாகிலும், 3திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பரித்தனையே. 4‘தெரிவைமார் உருவமே மருவி’ என்கிறபடியே, பல உருச்சொல்லிப் போக வேண்டாதே இவ்வோர் உருவிலும் போரும்படி அன்றோ அவர்கள் சொல்லுவது? சன்ம சன்மாந்தரம் காப்பர் - ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி பாதுகாப்பார்கள். மேற் பாசுரங்களிலே ஸ்ரீவைஷ்ணவர்கள்பக்கல் ஆதரத்தாலே பிறவியை ஆதரித்தார்; இப்பாசுரத்தில் அவர்கள் செய்யும்படியைச் சொல்லுகிறார்.

(6)

_____________________________________________________

1. திருவாய். 1. 10 : 11.

2. படி - திருமேனி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளில் வருவதற்கு
  மேற்கோள், ‘படி கண்டு அறிதியே’ என்பது. இது, முதல் திருவந். 85.

3. கண்ணி நுண்சிறுத்தாம்பு, 3.

4. ‘திரிதந்தாகிலும்’ என்ற பாசுரத்தில் ‘தேவபிரானுடைக் கரிய கோலத்
  திருவுரு’ என்று ஒருமையில் அமைந்திருப்பதற்கு ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார், ‘தெரிவைமார் உருவமே’ என்று தொடங்கி.
  ‘தெரிவைமார் உருவமே’ என்ற பாசுரம், பெரிய திருமொழி, 1. 1 : 3.