|
New Page 1
றேன்’ என்கிறபடியே, தானே
வந்து 1‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ என்கிற திருப்பதிகத்திலே
பிராட்டியைப் போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வருகுள்ளவற்றைக்
கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு, 2’இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து
புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளையடைந்து’ என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு
விளங்கும்படியாகச் செய்து, பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு,
இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை.
3‘எவர் ஒருவர் மிக்க பத்தியையுடையவராய் உபாசனை செய்து எனது சாயுஜ்ய பதவியை
அடைகின்றாரோ அவர் விரோதி கழிந்தவராய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்,’
எனப்படுதலால்
‘தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்’
என்கிறார்.
‘தன்மை பெறுத்தி’ என்றது, ‘தனது சொரூபம் தோன்றும்படி செய்து’ என்றவாறு. 4இது
_____________________________________________________
‘நடைபெற அங்கி
பகல்ஒளி நாள்உத்த ராயணம்ஆண்டு
இடைவரு காற்றுஇர
விஇர வின்பதி மீன்வருணன்
குடையுடை வானவர்
கோன்பிர சாபதி என்றிவரால்
இடையிடை போகங்கள்
எய்தி எழிற்பதம் ஏறுவரே.’
என்ற திருப்பாசுரத்தால்
உணரலாகும்.
(ஸ்ரீ தேசிகப் பிரபந். அதிகார சங்.
28)
திருவாய்மொழி, பத்தாம்
பத்து, ஒன்பதாம் திருவாய்மொழி, இவ்வர்ச்சிராதி
மார்க்கத்தைக் கூறுவதேயாம்.
1.
பெரிய திருமொழி. 3. 7 : 4.
2.
காந்தோக்யம்
3. "பரம்பொருளோடு ஐக்யமாதலே
மோக்ஷம்,’ என்று சிலர் சொல்லாநிற்க,
இவர் ‘தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்று
அருளிச்செய்தல்
பொருந்துமோ?’ என்ன, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘எவர் ஒருவர்’
என்று
தொடங்கி.
4. ‘இறைவன் தன்
பேறாக நினைத்திருப்பானேயாகில், அது, இவனுக்கு
உபகாரமானபடி என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இது
தன்னை’ என்று தொடங்கி. ‘பாரதந்திரியத்தாலே’ என்றது,
‘ஆத்துமாக்கள்
எல்லாம் இறைவனுக்குச் சரீரமாக இருத்தலால் அவ்வழியால் வந்த
பாரதந்திரியத்தால்’
என்றபடி.
|