பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
275

பெ

    பொ-ரை : எல்லா வகையாலும் வேர் ஊன்றிய துரியோத நாதிகள் அழியும்படி அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு அருள் செய்த நெடியோனைப் பற்றிய, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபருடைய குற்றேவல்களாகிய, அடிகளுக்குக் கூறிய இலக்கணங்கள் அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் அவனுடைய அடியார்கள்மேல் முடிவு; இவற்றை நன்றாகக் கற்றால், பிறவி உண்டாகாதபடி முடிந்துபோம்.

    வி-கு : ‘அவன் தொண்டர்மேல் முடிவான இவை பத்து ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியும்’ என மாறுக. ‘வீயச்செய்த நெடியோன்’ என்க.

    ஈடு : முடிவில், 1‘பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையைப் பற்றிப் பரக்கப் பேசிய இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், இப்பேற்றிற்கு விரோதியான சமுசாரத்தைக் கடப்பார்கள்,’ என்கிறார்.

    அடி ஓங்கு நூற்றுவர் வீய - பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும், வனவாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே நிறைந்து இராச்சியத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி. அன்று - அவர்களாலே தள்ளப்பட்ட அன்று. ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை - இரண்டு இடத்திலும் ஒக்குங்காணும் ஐவர்க்கு அருள் செய்கை. 2இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்; அங்கு 3அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான். இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள, 4‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்
_____________________________________________________

1. ‘இவை பத்து அவன் தொண்டர்மேல் முடிவு; ஆரக் கற்கில் சன்மம்
  செய்யாமை முடியுமே,’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்’ என்றது,
  ‘வலித்துத் தாக்குகின்ற ஐம்பொறிகளால் வரும் துக்கம் இல்லாதபடி அருள்
  செய்தான்,’ என்றபடி. ‘திசை திசை வலித்து’ என்னும் இது, திருவாய்.
 
7. 1 : 10.

3. அவர்களாலே எற்றுண்ட ஐவர் - பாண்டவர்கள்.

4. பாரதம்