எட
எட்டாந்திருவாய்மொழி
- ‘முடியானே’
முன்னுரை
ஈடு : 1’செய்ய
தாமரைக் கண்ணனாய்’ என்ற திருவாய் மொழியில் ‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று
கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும் என்று விடாய்த்தபடி
சொன்னார். 2நிழலும் அடிதாறுமான ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, பின்னர்த்
தொடங்குகின்ற பாகவதர்களுடைய சேர்க்கை, ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு தரிக்கைக்கு
உடல் அன்றிக்கே, பகவானுடைய குணங்களை நினைவு மூட்டக்கூடியதாய் மேலே பிறந்த விடாயினை மேன்மேல்
வளரச் செய்தது. ‘அச்சேர்க்கை விடாயினை மேன்மேல் வளரச் செய்தவாறு யாங்ஙனம்?’ என்னில்,
மேலே பாகவதர்களுடைய சொரூபத்தை நிரூபிக்கும் முறையாலே பகவானுடைய குணங்கள் முதலாயினவும் சொல்லப்பட்டன
அன்றோ?
‘நன்று; நிரூபகமாகச்
சொன்னால் அது விடாயை வளர்க்கக் கூடுமோ?’ என்னில், வேறு ஒன்றற்காகப் புகுந்தாலும் தன்னை
ஒழியப் புறம்பு ஒன்றுக்கு ஆள் ஆகாதபடி தன் பக்கலிலே துவக்கிக்கொள்ள வற்றாய் அன்றோ பகவானுடைய
கல்யாண குணங்கள் இருப்பன? 3அவற்றாலும் காதல் கரை புரண்டு, ‘என்றுகொல் கண்கள்
காண்பது!’ என்னும் அளவே அன்றி, மற்றை இந்திரியங்களும் விடாய்த்து, 4ஒர் இந்திரியத்தின்
தொழிலை மற்றை
_____________________________________________________
1. "தேர் கடவிய
பெருமான் கனைகழல் காண்பது என்றுகொல் கண்கள்?’
எனக் கூறிய விடாய் தீர’ ’பயிலும் சுடரொளி’
என்ற திருவாய்மொழியில்
சமாதானம் செய்திருக்க, இத்திருவாய்மொழியில் ஆற்றாமையாலே
கூப்பிடுகைக்கு
அடி யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘செய்ய தாமரை’ என்று தொடங்கி. ‘மேலே
பிறந்த விடாய்’ என்றது,
‘கனைகழல் காணப் பெறாமையால் உண்டாய விடாய்’ என்றபடி.
2.
பெரிய திருவந்தாதி, 31.
அடிதாறு - பாத
ரேகை; மரவடியுமாம்.
3. ‘அவற்றாலும்’ என்றது, ‘கனைகழல் காண்பது என்றுகொல்!’ என்ற
விடாயாலும், பாகவதர்களுடைய சேர்க்கை அதனை
வளரச்
செய்ததனாலும் என்றபடி.
4. ‘ஓர் இந்திரியத்தின்
தொழிலை மற்றை இந்திரியங்களும் ஆசைப்பட்டு’
என்றது, இத்திருவாய்மொழியில் இரண்டாம்
பாசுரம் முதல் ஆறாம்
பாசுரமுடிய உள்ள பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி.
|