|
பவ
பவிப்பித்தல் முதலியவைகளாலே
பட்டினியைப் போக்க ஒண்ணாது’ என்னும்படி, கேட்டார் எல்லாம் நீராகும்படி பெருந்தானத்திலே
பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.
1ஸ்ரீ
குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான்
ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே,
‘பலநாள்’
என்னாநின்றான்
ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான்
என்?’ என்று
மிளகாழ்வானைக்
கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம்.
‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?
‘ஞானம் வெளிப்படுதற்கு
வழியாக உள்ள கரணங்கள் விடாய்க்கையாவது என்?’ என்னில், ஆழ்வாருடைய காதல்
_____________________________________________________
1. ஸ்மாரக சந்நிதி
(நினைவை ஊட்டுகின்ற பொருள்களின் அண்மையில்
இருக்கும் இருப்பு) விடாயினை வளர்க்கும் என்பதற்கு,
சிம்ஹாவலோக
நியாயத்தாலே மீண்டும் சம்வாதம் அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீ
குகப்பெருமாளோடே’ என்று
தொடங்கி. இது,
ஸ்ரீராமா. அயோத். 59. 3.
இந்த சுலோகத்தின்
பொருள் முழுதும் வருமாறு: ‘பெருமாள் மீண்டும்
என்னைக் கூப்பிடுவாரோ என்னும் ஆசையால் கங்கையின்
வடகரையில்
ஸ்ரீ குகப்பெருமாளோடே பல நாள்கள் தங்கியிருந்தேன்,’ என்பது. இது
மீண்டு வந்த சுமந்திரன்
சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறியது. ‘ஒன்றிரண்டு
நாளாயிருக்க’ என்றது, சுமந்திரன், தமஸா
நதியின் கரையிலும் கங்கையின்
கரையிலும் பெருமாளோடே இரண்டு நாள் கூடியிருந்து, பெருமாள் பிரிந்த
பின்னர், ஸ்ரீகுகப்பெருமாளோடே சிருங்கிபேர புரத்திலே இரண்டு நாள்
கூடியிருந்து, ஐந்தாம் நாள்
மீண்டு அயோத்தியாநகரத்தை
அடைந்தானாதலின் அதனை நோக்கி என்க. பெருமாளைப் பிரிந்த ஐந்தாம்
நாள் சக்கரவர்த்தி பூதவுடல் நீங்கினமையும் இங்கு நினைவிற்கோடல்
வேண்டும். ‘பிரிவாலே காலம்
நெடுகினபடி’ என்றவிடத்து,
‘ஒருநாள் எழுநாள்போற்
செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு
பவர்க்கு.’
என்ற திருக்குறள் ஒருபுடை
ஒப்பு நோக்கலாகும்.
2. தாம் அருளிச்செய்த
பொருளுக்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார்,
‘ஸ்ரீகுகப்பெருமாளோடே’ என்று தொடங்கி. இவ்வர்த்தத்திற்கு
ஆழ்வார்
ஸ்ரீ சூக்தி, ‘மேகக் குழாங்கள்’ என்பது. இது,
திருவாய்.
9. 5 : 7.
|