| 
உன
 
    உன்னை - இத்தலை 
தொழுது இருப்புப் பெறுமாறு போன்று, தொழுவித்துக்கொண்டு இருப்புப் பெறும் உன்னை. என்றது, 
‘தொழுது அல்லது தரியாத கையாலே தொழுவித்துக்கொண்டு அல்லது தரியாத உன்னை’ என்றபடி. அன்றிக்கே, 
‘கை வந்தபடி செய்யச்சொல்லி விட்ட உன்னை’ என்னுதல். ‘அடையத்தக்கவனான உன்னை’ என்னுதல். 
‘ஆயின், நாம் தொழுகைக்குத் தொழப்படுகின்றவன் தகுதி உள்ளவனாக வேண்டுமோ?’ எனின், 1‘நாய்த்தொழிலே 
அன்றோ புறம்பு தொழுவது? வைகலும் ஓர் மாத்திரைப் போதும் வீடு இன்றி - நாள்தோறும் அதுதன்னிலும் 
ஒரு கணமும் இடைவிடாதே. ‘ஒரு நாளைக்கு ஒருகால் தொழுது தேவை அற்று இராதே இடை விடாதே தொழுது’ 
என்பார், 
‘ஓர் மாத்திரைப்போதும் வீடின்றி’ 
என்கிறார். 2‘நித்யாக்நி 
ஹோத்ராதிகளைப் போன்று செய்யலாகாது’ என்றபடி. பை கொள் பாம்பு ஏறி உறை பரனே - திருமேனியின் 
பரிசத்தாலே விரிந்திருக்கிற பணங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளுகையாலே தகட்டில் 
அழுத்தின மாணிக்கம் போலே இருக்கையாலே ‘பரன்’ என்கிறது. 3இதனால் தொழுவித்துக் 
கொள்ளுகைக்கு ஈடான உயர்வு அற உயர்ந்த உயர்வினையும், விரும்பத் தக்கதாகையையும், தொழுமவர்கள் 
இருக்கும்படியையும் 
____________________________________________________ 
 
‘முக்தாநாம் லக்ஷணம் 
ஹ்யேதத் சுவேதத்வீப நிவாஸிநாம் 
   நித்யாஞ்சலிபுடா 
ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந:’ 
 
      முக்தாநாம் லக்ஷணம் 
ஹ்யேதத் - என்று முத்தர்க்கு லக்ஷணம் 
  சொல்லுகிறவிடத்தில் ஸ்வேத த்வீப வாசிகள் படியாகச் 
சொல்லி 
  அவர்களையிறே நித்யாஞ்சலிபுடா: என்கிறது. ஹ்ருஷ்டா: - பசியிலே 
  உண்ணப்பெற்றாற் 
போலேயாயிற்றுத் தொழுதால் இருக்கும்படி. நம 
  இத்யேவ வாதிந: - இதுவே சீலமாயிருக்கை. 
 
1.
மநு ஸ்மிருதி, 4 : 6. 
 
      நாய்த்தொழிலேயன்றோ?’ 
என்றது, ‘நாய்த்தொழிலாதலின் விட்டுவிட 
  வேண்டும்’ என்பது கருத்து. 
 
2. ‘நித்யாக்நிஹோத்ராதிகளைப் 
போன்று செய்யலாகாது’ என்றது, ‘நாடோறும் 
  செய்யப்படும் அக்நி காரியங்களைக் குறித்த காலத்தில் 
செய்தலே 
  போதியதாம்; இஃது அங்ஙனம் அன்று,’ என்றபடி. 
 
3. ‘இதனால்’ என்றது, 
‘’பரன்’ என்றதனாலும், பாம்பிற்குப் ‘பை கொள் பாம்பு’ 
  என்று அடைகொடுத்து ஓதியதனாலும்’ என்றபடி. 
‘பை கொள் பாம்பு’ 
  என்றதனால், தொழுமவர்கள் இருக்கும்படியை உணரலாகும். 
 |