|
த
தின் ஒலியையுடைத்தான
சிறகின் ஒலியை நினைத்துக் கிடந்து திண்ணிதாக நினைத்துக்கொண்டேயிருக்கும்.
வி-கு :
‘என் செவிகள்
‘கண்களாற்காண வருங்கொல்!’ என்று ஆசையால் பாவித்துக் கிடந்து, திண்கொள்ள ஓர்க்கும்’ எனக்
கூட்டுக. ‘மகிழ்ந்து செல் புள்’ என்க. பண் - சாம வேதம்: கலனையுமாம்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு.
1செவிகளானவை கண்ணினுடைய தொழிலையும் தம்முடைய தொழிலையும் ஆசைப்படா நின்றன,’ என்கிறார்.
கண்களால் காண
வருங்கொல் என்று ஆசையால் - தன்னைக் காணவேண்டும் என்று விடாய்த்த இக்கண்களாலே ஒருகால் காண
வருமோ?’ என்னும் ஆசையாலே செவிகள் கிடந்து ஓர்க்கும்; 2கன்னம் இட்டும் காணவேண்டும்படியன்றோ
இறைவனுடைய சிறப்பு இருப்பது? 3‘பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும்
நாராயணனே,’ என்கிறபடியே, ‘கண்ணுக்கு வகுத்த அப்பரமனைக் காண வருமோ?’ என்னாநின்றது என்றபடி.
‘ஆயின், அறிவு இல்லாத கரணங்களுக்கு ‘வருங்கொல்’ என்று விடாய்க்கை கூடுமோ? எனின், 4‘அன்போடு
கூடின யான்
துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்களால்
ஆடவர் திலகனான ஸ்ரீ ராமபிரானை
எப்படித் தொடுவேனோ?’ என்றாள்
பிராட்டி.
‘அவனும் வருவானாயோ?’
என்னில், அஃது ஒன்று இல்லை; ஆசையால் - தன் ஆசையாலே. அன்றியே, ‘தன் ஆசையைப் பார்த்தால்
அவன் வரவு தப்பாது என்னும் நினைவாலே’ என்னுதல். ‘ஆசை மாத்திரம் போதியதாமோ?’ எனின், அவ்வளவு
அமையும் ஒன்றே அன்றோ? பகவத் விஷயத்தில் இட்ட படை கற்படை
____________________________________________________
1.
'கண்களால் காண
வருங்கொல் என்று ஆசையால் திண் கொள்ள ஓர்க்கும்
கிடந்து என் செவிகளே,’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘செவிகள் தம்
தொழிலையே அன்றிக் கண்களின் தொழிலையும்
ஆசைப்படுதற்குக் காரணம் என்னை?’ என்னும் வினாவைத்
திருவுள்ளத்தே
கொண்டு, ரசோக்தியாக அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கன்னமிட்டும்’
என்று
தொடங்கி. கன்னம் - காதும், சுரங்கமும். சுரங்கமிட்டாகிலும் என்பது
தொனி.
3.
சுபாலோபநிடதம்.
4.
ஸ்ரீராமா. சுந். 40 : 3.
இங்குத் ‘துக்கத்தால்
மிக இளைத்திருக்கிற அவயவங்களால்’ என்பதனை
நோக்குக.
|