பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
308

New Page 2

போல் வலிய நெஞ்சம்’ என்று வன்மைக்கு மரத்தைச் சொல்லுகையாலே, நெஞ்சின் வன்மையைத் தெரிவித்தபடி. ‘மா’ என்கையாலே, மாறு என்று கறுப்பாய், அத்தால், சீற்றத்தைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘மா’ என்பதனால் பெருமையைச் சொல்லி, அதனால், வேறு வினை செய்யாமல் மேலே விழ அமைந்திருத்தலைத் தெரிவித்தபடி ஆகவுமாம். ‘பொருந்திய’ என்றதனால், நினைத்த காரியத்திற்குப் பொருந்தியிருத்தலைக் கூறியபடியாய், இவற்றின் நெஞ்சில் பொருத்தத்தைத் தெரிவித்தபடி. ஆக, ‘இப்படிச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டையுடையராய், சீற்றத்தையுடையராய் கிருஷ்ண தரிசனத்தாலும் நெஞ்சு நெகிழாத வன்மையையுடையராய், மரத்தின் வடிவாய் அமைந்த அசுரர்கள்’ என்றபடி. இடை போய - இப்படி நிற்கிறவற்றின் அருகே போகையுங்கூடப் பயங்கரமாய் இருக்க, இவற்றின் நடுவே, 1ஒன்றிலே வெளி கண்டு போவாரைப் போலே போனான் ஆயிற்று. எம் பெருந்தகாய் - அவற்றின் நடுவே அவற்றைத் தப்பிப் போய் எனக்கு இறைவனான உன்னைத் தந்த பெரியோனே!

    உன் கழல் காணிய - 2‘அப்போது கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசப்பட்டு’ என்கிறபடியே, கடகட என்று அவைமுரிந்து விழுகிற போதை ஓசையைக் கேட்டுப் புரிந்து பார்த்து முன் இல்லாத காட்சியைக் கண்ட காரணத்தால் மலர்ந்த அக்கண் போலே சிவந்திருக்கிற திருவடிகளைக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு. என்றது, 3‘தாமரைக் கண்ணரான அந்தக் கண்ணபிரான் சென்றார்’ என்று புரிந்து பார்த்த கண்களைக் காண ஆசைப்பட்டான் மஹரிஷி; தவழ்ந்து போகிற போதைத் 4திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றபடி. எல்லா நிலை

____________________________________________________

1. மரங்கள் இரண்டாயிருக்க ‘மருதின் இடை’ என்று ஒருமையிலே
  பிரயோகித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒன்றிலே வெளி கண்டு
  ‘போவாரைப்போலே’ என்று.

2. மஹரிஷிக்குத் திருக்கண்களிலே ஆதரம் நடந்தாற்போன்று, ஆழ்வார்க்குத்
  திருவடிகளிலே ஆதரம் நடந்தது என்று தோற்றுகைக்காக ‘அப்போது’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 6. ‘மஹரிஷி’ என்றது, ஸ்ரீ பராசரபகவானை.

4. ‘திருவடிகளைக் காண ஆசைப்படுகிறார் இவர்,’ என்றது, ‘தம்முடைய
  சேஷத்துவத்திற்குத் தகுதியாகத் திருவடிகளை அநுசந்திக்கிறார்’ என்றபடி.
  பிரிந்து நோவுபடும் சமயத்திலும் சொரூபம் குலையாமல் இருக்கிற தன்மை