|
New Page 1
ளையும் 1உடையனாய்,
திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம்
போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக் 2‘கேட்டு
ஆரார் வானவர்கள்’ என்றும், 3‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும்
சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய், கவி பாடினார்க்கு வழங்குகைக்கு 4‘வேண்டிற்று
எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய், அவர்களுக்குக் கொடுக்கைக்கு
5உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், 6‘வல்லது ஓர் வண்ணம்
சொன்னால், அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே
சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும் குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி
கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே, 7‘எங்கும் உளன் கண்ணன்’
என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், 8சுலபனுமாய், கவி
பாடினார்க்குப் போகம் மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும்
தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம் போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க
அவனை விட்டு;
____________________________________________________
1. இத்திருமொழியில்
வருகின்ற ‘ஆய பெரும்புகழ் எல்லை இலாதன’
என்றதனை நோக்கி, ‘எல்லா நற்குணங்களையும் உடையனாய்’
என்றும்,
‘மணிமண்ணன்’ என்றதனை நோக்கிப் ‘பேரழகன்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
2.
திருவாய்.
10. 6 : 11.
3.
திருவாய். 9. 4 : 9.
4.
திருவாய். 3. 9 : 5.
5. ‘விண்ணவர் தாதை’ (3. 9 : 4.) என்றதனை நோக்கி, ‘உபயவிபூதி
ஐஸ்வர்யத்தையுடையனாய்’ என்கிறார்.
6.
திருவாய்.
7. 8 : 10.
7.
திருவாய். 2. 8 : 9.
8. ‘கண்ணன் குறுங்குடி’ என்றதனை
நோக்கிச் ‘சுலபனாய்’ என்றும்,
‘வேண்டிற்றெல்லாம் தரும்’ என்றதனை நோக்கிப் ‘போகம் மோக்ஷம்
முதலிய எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்றவனாய்’ என்றும்,
‘விண்ணவர் தாதையைப்
பாடினால் தன்னாகவே கொண்டு’ என்றதனை
நோக்கித் ‘தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம்
போரும்படி
இருக்கிற’ என்றும் அருளிச்செய்கிறார்.
|