|
இ
இருக்கவும்,
சொல்லும்படி அன்றோ இருக்கின்றது நீங்கள் நிற்கிற தீய நெறியின் தன்மை?’ என்னுதல்.
ஆகிலும்
சொல்லுவன் - ஆயிருக்கவும் சொல்லுகிறேன். ‘நன்று; இப்படி இருக்கவும் சொல்லுகிறது என்?’ என்னில்,
நீங்கள் 1சமம் தமம் முதலிய குணங்களோடு கூடினவர்களாய்ச் சமிதை தரித்த கைகளையுடையவர்களாய்
வரச்சொல்லுகிறேன் அன்றே? உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்; ஆகையால்
அதற்குப் பரிகாரம் பிறக்குமளவும் சொல்லுகை தவிரேன். என்றது, நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றினின்றும்
மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி
என்கிறார் என்றபடி. கேண்மினோ - ‘இது கேட்ட பின்னர் நடைமுறை அளவும் வரவேண்டும் அன்றோ?’
என்று அஞ்ச வேண்டா; செவி தாழ்க்க அமையும்; அதனைச் செய்ய வேண்டா.
‘அது என்?’ நலத்தை
விரும்பியே அன்றோ சொல்லுகிறது?’ என்னில், கேட்கவே, மக்கள் ஆகையாலே மேல் விழுவர்கள் அன்றோ?
ஆசையோடு அடையத் தக்கவாய் வருமவற்றுக்கு நாம் சொல்லவேண்டா; ஆகையால், நாம் அதனை விதித்தோம்
ஆகிறது என்? என்று? ‘கேண்மின்’ என்கிறார். ‘கடலோசைக்குச் செவி புதையாதே கேட்கின்றமை
உண்டன்றே? 2அவ்வோபாதியாகிலும் கேண்மின்,’ என்பார், ‘கேண்மினோ’
என்கிறார். கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின்,
‘கேண்மின்’ எனப் பன்மை வாய்பாட்டால் அருளிச்செய்கின்றார். பால் குடிக்கக் கால்
பிடிப்பாரைப் போன்று பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால் பிடிக்கிறார் இவருடைய செல்லாமையாலே
____________________________________________________
தூய்மை இழக்கும் என்பது
இரண்டாவது வகையின் கருத்து. இங்கு ‘நீர்
நுமது என்ற இவை’ (1. 2 : 3.) என்ற பாசுரத்தின்
வியாக்கியானம் பார்க்கத்
தகும்.
1. சமம் தமம் என்பன,
ஆத்துமகுணங்கள்.
சமிதை - யாகத்திற்குரிய
ஆல் அரசு அத்தி இத்தி மா பலாசு வன்னி
நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி.
2. அவ்வோபாதி -
அதைப் போன்று. இவ்வழக்குப் பண்டைய
உரையாசிரியர்களிடத்தில் காணலாகும். ‘களிறு பல பூட்டி’
என்றது, ‘அவன்
ஏறும் யானைகளை அவனை அவமதித்துச் சாட்டிற்குக்
கடாவோபாதியாகப்
பூட்டி
என்றவாறு’ என்பது
பதிற்றுப் பத்து.
(செய். 44, பழைய உரை.)
|