|
உர
உரித்து வைத்தாரே அன்றோ
அவர்கள் தன்மையை? அறிவு இல்லாத பொருள்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்; 1தன்னை
மெய்யாக அறியாதவன் அறிவு இல்லாத பொருள்களுக்குச் சமமானவன் ஆகையாலே மனிதன் என்று
சொல்லவும் பாத்தம் காண்கின்றிலர்காணும். கவி பாடி என் - இவர்கள் மறைத்திட்டு வைக்கிற
குற்றங்களைப் பிரபந்தமாக்கி வெளியிட்டால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு?
குளன் ஆர் கழனி
- விளைநிலங்களைக்காட்டிலும் ஏரிக்கட்டே விஞ்சி இருக்குமாயிற்று. இல்லையாகில், சாவி போம்
அன்றோ? இதனால், காப்பாற்றப்படுகின்ற பொருள்களைக்காட்டிலும் இறைவனுடைய பாதுகாக்கும் தன்மையே
விஞ்சின ஊர் என்பதனைத் தெரிவித்தபடி. குளன் - குளம். ஆர்தல் - மிகுதல். கண்ணன் குறுங்குடி -
சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம். ‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப்
பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்; அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’
என்பது பொருள். மெய்ம்மையே உளனாய - கவிகளில் கேட்டுப்போமித்தனையேயாய்த் தன் பக்கல்
ஒரு நன்மையும் இன்றிக்கே இருக்கை அன்றியே, சொன்னவை எல்லாம் மெய்யே பத்தும் பத்தாகக் காணலாம்படி
இருக்கும் ஸ்வாமி. இவ்விஷயத்தில் 2அர்த்தவாதம் இல்லை; புறம்பே உள்ளவற்றில்
அர்த்தவாதம் அல்லது இல்லை. இவ்விஷயத்தில் உள்ளன எல்லாம் சொல்லி முடியா; புறம்பே உள்ளவற்றில்
சொல்லலாவது இல்லை.
எந்தையை - நான்
கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை. அன்றிக்கே, ‘கவிபாடுகைக்கு
வகுத்த விஷயமானவன்’ என்னுதல். ‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக
உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி. எந்தை பெம்மானை ஒழியவே - சம்பந்தம்
___________________________________________________
1. ‘தன்னை மெய்யாக’
என்றது, சிலேடை: ஈசுவரனுக்குத் தன்னைச் சரீரமாக
நினையாதவன் என்றும், தன்னை உண்மையாகவே அறியாதவன்
என்றும்
பொருள் காண்க.
2. அர்த்தவாதம்
- புனைந்துரை; புகழ்ந்து பேசுதல்.
இவ்விடத்தில்,
‘இருள்சேர் இருவினையும்
சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு.’
என்ற திருக்குறளின்
விசேடவுரை படித்தறிதல் தகும்.
|