|
இப
இப்படியேகாணும் படுவது’
என்று இவர் இழவினை நீக்க நினைத்து, ‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில்
திருமலையில் நின்றோம்; அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச்
சமாதானம் பண்ண, சமாதானத்தையடைந்தவராய்த் தலைக்கட்டுகிறார்.
‘ஆயின், 1தெற்குத்
திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை வடக்குத் திருமலையில்
நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில், 2முலை வேண்டி
அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பசியைப் போக்குதல் செய்யுமித்தனையேயன்றோ? ‘நன்று;
இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில்,
வேண்டா; 3இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே ‘அதுவே வேணும்; அது அன்று இது,’
என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு. 4மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய்,
மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்; பசியில்லாத காலத்தில்
____________________________________________________
1. தடஸ்த சங்கையை
அநுவதிக்கிறார், ‘தெற்குத் திருமலையிலே’ என்று
தொடங்கி.
2. இதற்கு மூன்று
வகையாகச் சமாதானம் அருளிச்செய்கிறார், ‘முலை வேண்டி
அழுத’ என்று தொடங்கி. ‘முலை வேண்டி’
என்றவிடத்தில்,
‘தென்னன் உயர்பொருப்பும்
தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா
வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’
(பெரிய திருமடல்)
என்னும் பகுதியை நினைவு கூர்க.
3. ‘வழி திகைத்து
அலமருகின்றேன்’ என்பது இவர் திருவாக்கு. 3. 2 : 9.
4. இரண்டாவது சமாதானத்தை
அருளிச்செய்கிறார், ‘மற்றும்’ என்று தொடங்கி.
‘பாதகமாகக் காணாநின்றோம்’ என்றது, அப்படியே
தெற்குத் திருமலையில்
நிலை அளவிட முடியாததாகையாலே பாதகமாய், வடக்குத் திருமலையில்
நிலை கண்டுகொண்டு
அனுபவிக்கலாம்படி இருக்கையாலே அந்நிலையைக்
காட்டி அனுபவிப்பிக்கின்றான் என்றபடி. ‘ஆயின்,
ஒரு பொருளே தாரகமும்
பாதகமுமாய் இருக்குமோ?’ என்ன, அதற்கு விடையாகப் ‘பசியில்லாத
காலத்தில்’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘இவர்க்கு இன்னபோது
தாரகமாம், இன்ன போது பாதகமாம்
என்பதனை அறியும் வகை யாங்ஙனம்?’
என்ன, அதற்கு விடையாக, ‘இவர்க்கு இன்னது’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
|