பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
358

களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.

    சன்மம் பலபல செய்து - பலப்பல அவதாரங்களை எடுக்கின்றான் ஆயிற்று. 1இவ்வவதாரங்களின் அடி அறியுமவர்கள் அவதாரத்துக்கு அப்பால் பரத்துவத்திலும் போகமாட்டாதே அன்றோ இருப்பது? 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாத சர்வேசுவரன் இச்சை அடியாகப் பல விதமாக மற்றை இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்; அவ்வவதாரத்தின் காரணத்தை ஞானிகள் நன்கு அறிகின்றார்கள்,’ என்பது மறை மொழி. 3‘என்னுடைய அவதாரமும் அவதாரத்தில் நிகழ்த்தும் செயல்களும் தெய்வத்தன்மை வாய்ந்தவை,’ என்று அவன் தானும் நெஞ்சு உளுக்கி அன்றோ இருப்பது? 4‘பிறந்தவாறும் வளர்ந்தவாறும்’ என்று ஞானிகளில் தலைவரான இவரும் ஈடுபட்டு இருப்பர். ‘ஆயின், ஞானிகளில் தலைவரான இவர் ஈடுபடுதல் கூடுமோ?’ எனின், ஞானிகளில் தலைவராய் இருந்தமை அன்றோ ஆழங்காற்படுகைக்குக் காரணம்?

____________________________________________________

  கூட்டி முதல் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘அரக்கர் அசுரரை
  மாளப்பொருத’ என்றதிலே நோக்காக இரண்டாவது அவதாரிகை
  எழுதப்படுகிறது. ‘சன்மம் பலபல செய்து வெளிப்பட்ட நன்மையுடையவன்’
  என்றதிலே நோக்காக மூன்றாவது அவதாரிகை அருளிச்செய்கிறார்;
  ‘நன்மையுடையவன்’ என்றதிலே நோக்காக நான்காவது அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

1. ‘பிறவி தியாஜ்யமாகச் சொல்லப்பட்டிருக்க, பிறவியில் ஈடுபடுதல் கூடுமோ?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவ்வவதாரங்களின்’ என்று
  தொடங்கி. ‘அடியறியுமவர்கள்’ என்றது, ‘நிர்ஹேதுக கிருபை என்று
  அறியுமவர்கள்’ என்றபடி.

2. அவதாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதற்குப் பிரமாணமும்
  அநுஷ்டானமும் காட்டுகிறார், ‘கர்மம் காரணமான’ என்று தொடங்கி. இது,
  யஜூர் வேதம், 3, 8 : 17.

3. ஸ்ரீ கீதை, 4 : 9.

4. திருவாய். 5. 10 : 1.