| 1 ப 
1
படியாணியான ஒளி 
என்னவுமாம். ஆக, ‘நீரிலே நீர் கலந்தது போன்று வேற்றுமையறிதற்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது 
; முடியவில்லை,’ என்றபடி. 
    திருமாலே கட்டுரையே 
- இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி. 2‘அகலகில்லேன்’ என்று பிரியமாட்டாமலிருக்கிற 
பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து இதற்கு ஒரு போக்கடி அருளிச்செய்ய வேண்டும். 
இன்று அனுபவிக்கப் புக்க இவர், 3என்றும் ஓரியல்வினர் என நினைவரியவர்’ என்பர்; 
என்றும் அனுபவிக்குமவர்கள் 4‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்?’ என்றே பயிலாநிற்பர்கள்; 
ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான இறைவன் 5‘தனக்கும் தன் தன்மையறிய அரியனாய்’ இருப்பான்;’ 
ஆக, இப்படி இன்று, அனுபவிக்கப் புக்க இவரோடு, 6என்றும் அனுபவிக்குமவர்களோடு, 
இறைவன் தன்னோடு வேற்றுமையில்லை இந்த ஐயம் தொடர்வதற்கு; தமக்கு இந்த ஐயம் அறுதியிடவொண்ணாதது 
போலவே அவர்களுக்கும் என்றிருக்கிறார்; ஆதலின், ‘திருமாலே கட்டுரையே’ என்கிறார். கட்டுரையே 
- 'சொல்ல வேணும்’ என்றபடி. 
(1) 
224 
  
    
கட்டுரைக்கில் தாமரை நின்கண்பாதம் கைஒவ்வா;
 சுட்டுரைத்த நன்பொன்உன்
 திருமேனி ஒளிஒவ்வாது;
 ஒட்டுரைத்துஇவ் உலகுன்னைப்
 புகழ்வுஎல்லாம் பெரும்பாலும்
 பட்டுரையாய்ப் 
புற்குஎன்றே
 காட்டுமால் 
பரஞ்சோதீ!
 
_____________________________________________________ 
1. ‘படியாணியான ஒளி 
என்னவும் ஆம்,’ என்றது, ‘இந்தத் திருமேனி அந்தத்திருமேனியாய் மலர்ந்ததுவோ!’ என்றபடி. படி 
ஆணி - ஆணிப்பொன்.
 
2. திருவாய். 6. 
10 : 10.
 3. திருவாய். 1. 
1 : 6.
 
 4. பெரிய திருமொழி, 
8.  9.
 
 5. திருவாய். 8. 
4 : 6.
 
6. என்றும் அனுபவிக்குமவர்கள் 
- நித்தியசூரிகள். |