பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
69

எல

எல்லா இடத்திலும் உடனிருந்து ஒன்றும் குறையாதபடி எல்லா அடிமைகளையும் நாம் செய்ய வேண்டும்.

    வி-கு : தெழித்தல் - ஒலித்தல். வழுவிலா - குற்றமில்லாத. குற்றம் இல்லாமையாவது, ஓர் அடிமையும் நழுவாமை; ‘எல்லா அடிமையும்’ என்றபடி.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டில், ‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்,’ என்கிறார்.

    ஒழிவு இல் காலம் எல்லாம் - முடிவில்லாத காலமெல்லாம். இது, இனி வருகின்ற காலத்தைக் குறிக்கின்றது. இதற்கு, ‘இதுகாறும் கழிந்த காலத்தையுங்கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று மிகைபடக் கூறுவாருமுளர். அங்ஙனேயாயின், ‘கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருள் இல்லையேயன்றோ? 1‘ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே, கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது? 2‘இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்; ஆகையாலே, 3‘இனி மேலுள்ள காலம் எல்லாம்’ என்பதே பொருள். உடனாய் - காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச சம்பந்தமும் விருப்பமாயிருக்கிறதுகாணும் இவர்க்கு. இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வனத்திலும் அடிமை செய்தாற்போலே. மன்னி - சர்வேசுவரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக்கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப் போன்று 4அவ்வளவிலும் நின்று அந்தரங்க

_____________________________________________________

1. சாந்தோக்யம், 8. 12 : 3.

2. ஸ்ரீராமா. யுத். 5 : 5.

3. ‘கழிந்த காலத்தில் அடிமை செய்ய முடியாதாதலின், இனிமேல் உள்ள காலம்
  என்றே பொருள் கொள்ள வேண்டும்,’ என்றபடி.

4. ‘அவ்வளவிலும் நின்று’ என்றது. ‘அந்த இடங்கட்குத் தக்கவையான
  சரீரங்களை மேற்கொண்டு நின்று’ என்றபடி.