|
படத
படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள்
போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய்,
தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப
விஷய அனுபவம் போன்று துக்கங்கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய சுக ரூபமாய் இருப்பதொன்றன்றோ
இது?
1ஸ்ரீ
பரதாழ்வானைக் கைகேயி 2‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல்
படுகுலைப்பட்டாற்போன்று ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், 3பாரதந்திரிய
ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும். மேலும், 4ஏபிஸ்ச ஸசிவைஸ்
ஸார்த்தம் - சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ - தன்னிற்காட்டிலும் கண்
குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு
போந்தான். ‘இவன் தம்பி’ என்று சுவாதந்தரியம் மேற்கொண்டு, 5கண்ணழிக்கலாவது
எனக்கு அன்றோ? இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை
விசாரித்து அறுதி
____________________________________________________
1. ‘அடிமை துக்க ரூபமாயன்றோ இருப்பது? அங்ஙனமிருக்க, இவர் ‘செய்ய
வேண்டும்’ என்று பிரார்த்திப்பது எற்றிற்கு?’
என்னும் வினாவிற்கு விடையாக
அருளிச்செய்கிறார். ‘ஸ்ரீ பரதாழ்வானை’ என்றது முதல், ‘கைங்கரியத்தில்
சாபலமுடையார் இருக்கும்படி, என்றது முடிய. ‘சேஷத்துவம் துக்க
ரூபமாகவன்றோ நாட்டிற்காண்கிறது?’
என்னில், ‘அந்த நியமமில்லை; உகந்த
விஷயத்துக்குச் சேஷமாய் இருக்குமிருப்பு ஸூகமாகக் காண்கையாலே’
(
முழுக்ஷூப்படி,
52, 53.)
என்ற வாக்கியங்களை இங்கு நோக்குக.
2.
ஸ்ரீராமா.
அயோத். 72 : 24.
படுகுலைப்படுதல் - குலையிலே
பட்டு விழுதல்.
3. ‘பாரதந்திரிய ரசம்
அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும்’
என்றது, ‘தாஸ்ய ரஸஜ்ஞர்க்கு ஸ்வாதந்திரியம்
அஸஹ்யம்’ என்றபடி.
4. கைங்கரியம்
பிரார்த்தித்துப் பெறத் தக்கது என்பதற்கு மேற்கோள் ‘ஏபிஸ்ச’
என்ற சுலோகம். இது,
ஸ்ரீராமா, அயோத். 101
: 12.
5. கண்ணழிக்கை -
அருள் பண்ணாதொழிகை.
|