|
பு
புரைப்பு இலாத பரம்பரனே
பொய்யி லாத
பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த, யானும்
ஏத்தினேன்.
பொ-ரை :
‘உரைப்பதற்கு ஆற்றலுடையேன் அல்லேன்; உன்னுடைய எல்லையில்லாத கீர்த்தியாகிய வெள்ளத்தின்
கரையிடத்தில் நான் என்று செல்வேன்? காதலால் மயக்கத்தை அடைந்தேன்; குற்றம் இல்லாத பரம்பரனே!
பொய்யில்லாத பரஞ்சுடரே! நல்ல மேன்மக்கள் ஆரவாரம் செய்துகொண்டு ஏத்த, அதனைக் கண்டு யானும்
ஏத்தினேன்,’ என்கிறார்.
வி-கு :
பரம்பரன் - உயர்ந்த பரன்; மூவர்க்குள் முதல்வன். பரம் -உயர்வு. நல்ல மேன்மக்கள் - நித்தியசூரிகள்.
‘இரைத்து ஏத்த’ என்க.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன, ‘உன்
கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.
உரைக்க வல்லன் அல்லேன்
- உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டுபோமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட
மாட்டுகின்றிலேன். ‘எல்லாம் பேச ஒண்ணாதாகில், பேசக்கூடிய கூற்றினைப் பேசினாலோ?’ என்னில்,
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் நான் என்று செல்வன் - உன்னுடைய முடிவில்லாத
காதல் குணத்தால் வந்த கீர்த்திக்கடலினுடைய கரையிலேதான் என்னாலே செல்லப்போமோ?’ ‘இப்படிக்
கரை அருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக முயற்சி செய்வான் என்?’ என்னில், காதல்
மையல் ஏறினேன் - ‘என்னுடைய ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்; பிச்சு ஏறினாரை
‘நீர் இப்படிச் செய்வான் என்?’ என்னக் கடவதோ? இவ்விஷயத்தில் மயங்குவான் என்? மயங்குவார்க்கு
ஒரு பற்றுக்கோடு வேண்டாவோ?’ என்ன, ‘நித்தியசூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே
செய்தேன்,’ என்கிறார் மேல் :
_________________________________________________
1. ‘கரைக்கண் என்று செல்வன்
நான்?’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘கரை இல்லாத காதல்’ என்றது,
‘பொய்யி்லாத
பரஞ்சுடரே!’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
|