இல
இல்லை, விஷயத்தை எல்லைகாண
ஒண்ணாமைக்கு,’ என்றபடி. ‘ஆனால், நீர் ஏத்த இழிவான் என்?’ என்னில், தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்திப்ப எம்பிரானை யானும் ஏத்தினேன் - ‘சர்வ ரச :’ என்கிற சர்வேசுவரனுடைய
இனிமையாலும், ‘நாம் இவ்விஷயத்தில் இழிந்து ஏத்துவோம்,’ என்னும்படி தன் காதல் குணத்தை
உபகரித்த உபகாரகன் ஆகையாலும் ஏத்தினேன். ‘இனிது என்றும், உபகாரகன் என்றும், ஆற்றல் இல்லாதவரான
நீர் இதில் இழியக் கடவீரோ?’ என்ன, யான் உய்வானே’ - 1ஏத்தாவிடில் பிழையாதார்
ஏத்துவர் அத்தனை அன்றோ?
(10)
365
உய்வுஉ பாயம்
மற்றுஇன்மை
தேறி, கண்ணன்
ஒண்கழல்மேல்
செய்ய தாம ரைப்பழனம்
தென்னன்
குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல்
ஆயிரத்துள்
இவையும் பத்தும்
வல்லார்கள்
வையம் மன்னி
வீற்றிருந்து
விண்ணும்
ஆள்வர் மண்ணூடே.
பொ-ரை :
செந்தாமரைமலர்கள் நிறைந்துள்ள வயல்களாற் சூழப்பட்ட தெற்குத்திசையிலேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே
அவதரித்த ஸ்ரீசடகோபர், நன்னெறி சேர்வதற்கு உரிய வழி வேறு இல்லாமை தெளிந்து, கண்ணபிரானுடைய
சிறந்த திருவடிகளின்மேலே சார்த்திய பொய் இல்லாத பாசுரங்கள் ஆயிரத்துள் இவை பத்துப்
பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூலோகத்தில் பல காலம் தங்கியிருந்து இவ்வுலகத்தில்
இருந்துகொண்டே பரமபதத்தையும் அரசாட்சி செய்வார்கள்.
வி-கு :
‘குருகூர்ச்சடகோபன் உபாயம் மற்று இன்மை தேறிக் கண்ணன் கழல்கள்மேலே கூறிய இவை பத்தும் வல்லார்கள்
வீற்றிருந்து மண்ணூடே விண்ணும் ஆள்வர்’ எனக் ‘கூறிய’ என்னும் வினையை வருவித்து முடிக்க.
‘தேறிக் கூறிய பத்து’ என்க. தென்னன் என்பதனைத் ‘தென் நல்’ எனப் பிரித்துக் குருகூர்க்கு
அடையாக்குக. அன்றி, ‘தென்னன் சடகோபன்’ எனச் சடகோபர்க்கு அடையாக்கலுமாம். மன்னி - நிலைபெற்று.
_____________________________________________________
1. ‘ஏத்தாவிடில்’ என்றது,
‘இனிமையாலும் உபகாரகனாகையாலும் அவனை
ஏத்தாவிடில்’ என்றபடி.
|