| உட 
உட்பட்ட பூமிப்பரப்பு 
அடைய இருந்து துழாவா நிற்கும். அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது 
ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை 
என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ 
வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே 
அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்? 3‘விஷ்ணு 
பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ 
என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ? இருந்து -
4இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல் 
_____________________________________________________ 
1. அது - சம்பந்தம். 
2. ‘இப்படி அவன் சம்பந்தங்கொண்டு 
விரும்பினார் உளரோ?’ என்ன, அதற்குவிடை அருளிச்செய்கிறார், ‘பண்டு’ என்று தொடங்கி. இது,
ஸ்ரீராமா. பால.
 29 : 22 ; விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறியது.
 
  ‘தங்கள்நா யகரிற் றெய்வம் தவம்பிறி தில்என்று எண்ணும்மங்கைமார் சிந்தை போலத் 
தூயது; மற்றுங் கேளாய்:
 எங்கள்நான் மறைக்கும் தேவர் 
அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச்
 செங்கண்மால் இருந்து மேனாள் 
செய்தவம் செய்த தன்றே.’
 
  என்ற கம்பராமாயணச் செய்யுள் இங்கு 
ஒருபுடை ஒப்பு நோக்கலாகும். (  பாலகா, வேள்வி.  16. )
 
3. பாரதம், ஆரணியபருவம். 
இது, வீமசேனனைப் பார்த்து அனுமான்கூறியது. ‘இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்’
 என்றதனானே ‘பெருமாள் சஞ்சரித்த இடத்தை விடமாட்டாமையால்,
 இங்கேயே தங்கியிருக்கிறேன்,’ 
என்பது திருவடியின் உட்கோள்.
 இச்சுலோகப்பொருளோடு,
 
  ‘அந்த வார்சிலை இராமனுக்கு 
அடிமையாய் என்றும்சிந்தை யால்அவன் திருப்பதம் சிந்தைசெய் 
பவனும்
 முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித் 
தவனும்
 இந்த வாழ்வுடை அனுமனே என்றனன் 
இகலோன்.’
 
  என்ற செய்யுள்       ஒருபுடை ஒப்பு 
நோக்கலாகும். 
(வில்லிபா. ஆரணிய. புட்பயாத். 
36.) 
4. ‘இருந்து’ என்பதற்கு 
பாவம் அருளிச்செய்கிறார், ‘இவ்விருப்புக்கு’ என்றுதொடங்கி.
 |