பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
125

அன

அன்றோ? அத்தாலேயாதல்; 1வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல். அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம். 2‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ? வினையுடையாட்டியேன் பெற்ற - இவள் இத்தனை உள் புகுந்தது - மூழ்கியது நான் செய்த பாபமே அன்றோ? பிரிவிலும் வடிவு திருத்துழாய் நாறும்படி உள்புகுந்து - மூழ்கி, பின்பு போலி கண்டு மயங்கும்படி மயக்கமேயாய் விடுகைக்கு அடி, பாவத்தைச் செய்த என் வயிற்றிற்பிறப்பே அன்றோ?’ என்கிறாள் என்றபடி. 3பல பிறவிகளிலே ஈட்டப்பட்ட புண்ணிய பலத்தைப் பாப பலமாகச் சொல்லுகிறாளாயிற்று இப்போதை இழவைப் பற்ற. 4பகவத் விஷயத்தில் உள் புகுந்தவர்கள் பெற்றவர்களுக்கு ஆகார்களே அன்றோ? ‘அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்,’ என்னக் கடவதன்றோ? செறிவளை முன்கைச் சிறுமான் -

_____________________________________________________

1. இரண்டாவது கருத்து ஸ்வாபதேசம். ‘வந்தேறி’ என்றது, அவித்தியை
  முதலானவைகளை; ஆத்தும சொரூபத்தை நிஷ்கரித்தால், அது பகவானுக்கு
  அர்ஹம் என்று அறியக் கூடியதாயிருக்கும்; அந்தப் பகவத் சம்பந்த
  ஞானத்தை ‘நாறும்’ என்கிறாள் என்பது கருத்து.

2. காரியத்தைக்கொண்டு கற்பித்துக் கூறுதலுக்குப் பிரமாணம், ‘அன்றி
  மற்றோர்’ என்று தொடங்குவது. இது, திருவாய். 8. 9 : 10.

3. ‘பிரிவிலும் மயங்கும்படி அவகாஹித்தது புண்ணியத்தின் பலமன்றோ?
  அதனைப் பாபத்தின் பலம் என்றது என்னை?’ என, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பல பிறவிகளிலே’ என்று தொடங்கி.

4. ‘‘வினையுடையாட்டியேன்’ என்னும்படி தாயாரை நோவுபடுத்த வேண்டுமோ?
  பகவத் விஷயத்தில் அவகாஹித்தலைத் தவிர்ந்தாலாகாதோ?’ என்ன,
  அதற்கு விடையும், விடைக்குப் பிரமாணமும் அருளிச்செய்கிறார், ‘பகவத்
  விஷயத்தில்’ என்று தொடங்கி. ‘அன்னையும்’ என்று தொடங்கும்
  மேற்கோள், பெரிய திரு. 3. 7 : 7.