|
என
என்பாள்; நிற்கின்ற
மலையைப் பார்த்து, ‘நெடுமாலே! வா,’ என்று கூவுவாள்; மிக அதிகமாகப் பெய்கின்ற, மேகத்தைக்
கண்டால், ‘நாராயணன் வந்தான்!’ என்று மகிழாநிற்பாள்; என்னுடைய கோமளத்தை இத்தகைய மயக்கங்களைச்
செய்தார் என்றுகாண்,’ என்கிறாள்.
வி-கு :
ஒளி மணி - படிகமணி. ‘நன்று பெரிது’ என்பது தொல்காப்பியம். ‘என்னுடைய கோமளத்தை இன மையல்கள்
செய்தார் என்று’ என மாறுக. என்று - எச்சமுமாம். ‘இன’ என்பது, ‘இன்ன’ என்பதன் விகாரம். இன்ன
- இத்தன்மையான.
ஈடு :
நான்காம் பாட்டு. 1‘துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாத இவளை இப்படி நோவுபடுத்துவதே!’
என்கிறாள்.
ஒன்றிய திங்களைக்
காட்டி - எல்லாக் கலைகளும் நிரம்பின சந்திரனை அருகு நின்றவர்களுக்குக் காட்டி. ஒளி மணி வண்ணனே
என்னும் - 2‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம்
போலே குளிர்ந்த வடிவோடே அணைக்க வந்ததே!’ என்பாள் என்றபடி. அன்றிக்கே, ‘இவன் மிக்க ஒளியையுடைய
சர்வேசுவரன்’ என்று அவர்களுக்குச் சொல்லாநிற்பாள் என்னுதல். கேட்ட அவர்கள். ‘இம்மழுங்கல்
சந்திரன் அவன் ஆகையாவது என்?’ என்பார்களே? ‘ஐயம் இன்று; இவன் அவனே’ என்பாள், ‘ஒளி மணி
வண்ணனே’ எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள். நின்ற குன்றத்தினை நோக்கி - இவ்வளவிலே
ஏதேனும் ஒருமலை வாராக் கண்ணுக்குத் தோன்றுமே? அதனைப் பார்த்து, ‘நெடுமாலே வா,’ என்று கூவும்
-3வடிவில்
_____________________________________________________
1. ‘என்னுடைக் கோமளத்தை
இன மையல்கள் செய்தார்’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. குளிர்ச்சியான குணத்தின்
ஒப்புமையாலே ‘ஒளிமணி வண்ணனே’
என்கிறாள். அழைத்ததற்குப் பயன் அருளிச்செய்கிறார்,
‘புகரையுடைத்தான’
என்று தொடங்கி. ‘புகரையுடைத்தான’ என்பதற்கு முன் ‘அழைத்து’ என்னும்
ஒரு
சொல்லைக் கூட்டிக்கொள்க.
3. ‘தண்டுளி பலபொழிந்து எழிலி
இசைக்கும்
விண்டு வனைய விண்டோய் பிறங்கல்’
(புறம். 391.)
‘ஓங்கு மால்வரை வரையா டுழக்கலின்
உடைந்துகு பெருந்தேன்
தாங்கு சந்தனம் தளரத் தழுவி வீழ்வன
தகைசால்
ஆங்கண் மாலுல களப்பா னாழி சங்கமொ
டேந்தித்
தேங்கொள் மார்பிடைத்
திளைக்குஞ் செம்பொன் ஆரமொத் துளவே.’
(சிந். 1559.)
|