|
New Page 1
`1பாம்போடு
ஒரு கூரையிலே பயின்றாற்போலே அன்றோ திருத்தாயார்க்கு
இருக்கிறது?
அருவினையாட்டியேன்
பெற்ற - 2‘இவளுக்கு இங்ஙனம் ஒரு புத்தி பிறந்து படுகிறது நான் செய்த பாபமே அன்றோ?’
என்பாள், ‘அருவினையாட்டியேன்’ என்கிறாள். 3‘பிறந்திட்டாள்’ என்கிறபடியே,
அக்கரையளாய் இவள் தனக்குப் பெறாப்பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பாள், ‘பெற்ற’
என்கிறாள். 4‘அன்றிக்கே, ‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற’
என்கிறபடியே, ‘செய்து முடிக்க ஒண்ணாத புண்ணியங்களைப் பண்ணிப் பெற்ற மிருதுத்தன்மையையுடைய இவளை’
என்னுதல். கோமள வல்லியை - ‘கேவலம் வல்லி அன்று; 5கோமளவல்லி ஆயிற்று. அன்றிக்கே,
‘ஒரு கொள்கொம்போடே சேர்க்கவேண்டும் பருவம்; அதாவது, பிள்ளைப்பருவம்’ என்னுதல். மாயோன்
- தன்னைக் கண்டால் தந்தாமை அறியாதபடி பண்ண வல்ல காதல் குணத்தையுடையவன். மால் செய்து -
பிச்சு ஏற்றி. செய்கின்ற கூத்து - அடிக்கிற ஆட்டம். ‘ஆம் அளவு ஒன்றும் அறியேன்’ என மேல் உள்ளதனோடு
கூட்டுக.
(5)
_____________________________________________________
1. ‘பாம்பைத் தழுவாதிருக்கவும்,
‘இது என்னாய் விளையக் கடவதோ!’ என்பான்
என்?’ என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பாம்போடு’ என்று
தொடங்கி.
‘பாம்போடு ஒருகூ
ரையிலே பயின்றாற்போல்
தாங்காதுள் ளம்தள்ளு
மென்தா மரைக்கண்ணா!’
என்பது அப்பாசுரப்பகுதி. இது,
பெரிய திருமொழி, பதினோராம் பத்து,
‘மாற்றமுள’ என்கிற திருமொழியில் மூன்றாம்
பாசுரம்.
2. தன்னை ‘அருவினையாட்டியேன்’
என்கைக்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘இவளுக்கு’ என்று தொடங்கி.
3. ‘பின்னைகொல்! நிலமா
மகள்கொல்!
திருமா மகள்கொல்
பிறந்திட்டாள்!
என்ன மாயங்கொ லோ!இவள்
நெடுமால்
என்றே நின்று
கூவுமால்’
என்பது திருவாய்மொழி, 6. 5
: 10.
அக்கரையள் - பரமபதத்திலிருப்பவள்.
4. ‘அருவினையாட்டியேன்’ என்பதற்குப்
புண்ணியத்தையுடையவள் என்பதாக
வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
‘நெடுங்காலம்’ - திருவிருத்தம், 37.
5. கோமளவல்லி - மிருதுத்தன்மையையுடைய
வல்லி.
|