|
அன
அன்றோ? அதனைக் கேட்டும்,
அவன் கிருஷ்ணனே என்று காண ஓடுகின்றாள் என்பாள், ‘ஆம் எனா ஓடும்’ என்கிறாள்.
வாய்த்த குழல்
ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் -‘பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை
அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து
செவிப்படில் கிருஷ்ணன் என்று 1மோஹிப்பாள்; ‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன்
அன்றோ அவன்? அன்றிக்கே, 2‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா
பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன், ‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன
போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று, அவன் குழலிலே வைத்துச்
சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.
ஆய்ச்சியர் வெண்ணெய்கள்
காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் - முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில்,
3‘களவு காணப் புக்கு வாயது கையது ஆக அகப்பட்ட போது எஞ்சியிருந்த வெண்ணெயோடே ஒத்த வெண்ணெய்
ஈது,’ என்பாள். ‘பிராமணப் பெண்கள் தீண்டிய வெண்ணெய் இது,’ என்றால் கொள்ளாள் என்பாள்,
‘ஆய்ச்சியர் வெண்ணெய்’ என்கிறாள். ‘இவள் இப்படிக் கலங்குகைக்கு நிதானம் என்?’
என்னில், ‘அவன் முன்னரே ஓர் உபகாரத்தைப் பண்ணிவைத்தான்; அதிலே தோற்ற அன்று தொடங்கி
இவள் பிச்சு ஏறத்
_____________________________________________________
1. இனிமையின் ஒப்புமையாலே
மாயவன் என்று மயங்குகிறாள் என்றபடி.
அவன், குழலிசை போன்று இனியனாயிருப்பன் என்பதற்கு மேற்கோள்
‘நுடங்கு கேள்வி’ என்பது. இது, திருவாய்மொழி, 3. 4 : 6.
2. ‘மாயவன் என்று மையாக்கும்’
என்பதற்கு வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘பகல் எல்லாம்’ என்று தொடங்கி. இப்பொருளில்,
அவனுடைய பேச்சுக்குப் போலியாயிருத்தலைக் கொண்டு மயங்குகிறாள்
என்பது கருத்து. முன்னைய
பொருளில், ‘அவனுக்குப் போலியாயிருத்தலைக்
கொண்டு மயங்குகிறாள்’ என்பது கருத்து.
3. வேறுபட்ட
காலமாகையாலே, அவன் உண்டுவிட்டது என்ன ஒண்ணாது;
அவன் உண்டு சேக்ஷித்தது என்னவும் ஒண்ணாது; ஆதலின்,
அதற்கு
விரோதமின்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘களவு காணப்புக்கு’ என்று
தொடங்கி.
|