பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
14

New Page 1

போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்’ என்பதாம்.

    வி-கு : ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க; ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1இராசாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால் அதனை ஒரு பொருளாக நினைத்து நோக்காத மதிப்பினையுடையவர்கள், 2‘ஒரு சேதநன் - மகன், என்று எண்ண முடியாதபடி மதிப்பு அறுவர்கள் என்கிறார்.

    அடிசேர் முடியினர் ஆகி - தன்னோடு ஒக்க ‘அரசு’, என்று இருந்த இராசாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியையுடையராய். அரசர்கள் - இராசாக்கள். தாம் தொழ - தாங்கள் அறிந்ததாகத் தொழும் இத்தனை போக்கி, ‘இவன் இப்படித் தொழுதான்’ என்னும் நினைவு அவனுக்கு இல்லை’ என்பார், ‘தாம் தொழ’ என்கிறார். 3‘இன்று ஸ்ரீபாதத்திலே தலை தாக்கத் தொண்டன் இடப்பெற்றோம்,’ என்று இவன்

_____________________________________________________

1. ‘அடிசேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ இருந்தவர் பொடிசேர்
  துகளாய்ப் போவர்கள்,’ என்பதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. சேதநன் - அறிவையுடையவன். சேதநம் - அறிவு.

  ‘பல்லான்ற கேள்விப் பயன்உணர்வார் வியவும்
  கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
  சேதன மென்னும்அச் சேறுஅகத்து இன்மையால் 
  கோதென்று கொள்ளாதாம் கூற்று.’ 

  என்பது நாலடியார்.

3. ‘கண்டிலன் என்னை என்பார்; கண்டனன் என்னை என்பார்;
  குண்டலம் வீழ்ந்த தென்பார்; குறுகரி தினிச்சென் றென்பார்;
  உண்டுகொல் எழுச்சி என்பார்; ஒலித்தது சங்க மென்பார்;
  மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மயங்க என்பார்.’

  என்ற கம்பநாட்டாழ்வார் திருவாக்கு (பால காண். எழுச்சிப். 75) இங்கு
  ஒரு புடை ஒப்பு நோக்கலாகும்.