|
கர
கரிய பெரிய மேகங்களைக்
கண்டால், ‘கண்ணபிரான்’ என்று கூறிக் கொண்டு மேலே எழுந்து பறப்பதற்குப் பாராநின்றாள்; பெரியனவாயும்
காட்சிக்கு இனியனவாயும் இருக்கிற பசுக்கூட்டங்களைக் கண்டால், ‘கண்ணபிரான் அவற்றினிடையே
இருக்கிறான்,’ என்று அவற்றின் பின்னே செல்லுவாள்; பெறுதற்கரிய என் பெண்ணினை மாயவன்
வாய்விட்டு அலற்றும்படி செய்து மயங்கச் செய்கிறான்,’ என்கிறாள்.
வி-கு :
பகவர் - பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள்; சந்யாசிகள். ‘காணில் விரும்பி என்னும்’ என மாறுக.
விரும்புதல் - பெண்ணின் தொழில்.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘பெறுதற்கு அரிய இவள், தன்னையே வாய் வெருவி மயங்கும்படி பண்ணா
நின்றான்,’ என்கிறாள்.
பகவரைக் காணில்
விரும்பி வியல் இடம் உண்டானே என்னும் - 2ஞானம் முதலான குணங்களால் நிறைந்தவர்களாய்
இதர விஷயங்களில் விரக்தராய் இருக்கும் துறவிகளைக் காணில், ஆதரித்து, ‘பிரளய ஆபத்திலே
உலகத்தை அடைய வயிற்றிலே வைத்து நோக்கி, பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்களைப் பாதுகாத்தலைச்
செய்கையாலே வந்த மன நிறைவு தோற்ற இருக்கின்ற சர்வேசுவரன்,’
_____________________________________________________
1. ‘அரும்பெறல் பெண்ணை’
என்று தொடங்கி மேலுள்ளவற்றையும் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘பகவர்’ என்ற
சொல்லுக்கு ‘ஞானம், சத்தி முதலான குணங்கள் நிறைந்து,
வைராக்கியத்தையுமுடையவர்கள்’ என்பது
பொருளாதலின், அதனைத்
திருவுள்ளம் பற்றி, ‘ஞானம் முதலான’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
இவர்கட்கு முக்கோல் உண்டாகையாலே ‘முக்கோற்பகவர்’ என்றும் இவர்கள்
வழங்கப்படுவார்கள்.
‘நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’
என்பது தொல்காப்பியம்.
‘எறித்தரு கதிர்தாங்கி
ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும்
உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா
நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக்
கொளைநடை அந்தணீர்!’
என்பது கலித்தொகை
(பாலைக்கலி.)
|